Home /News /trend /

"மாஸ்க்கை இப்படி அணியுங்கள்" மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மும்பை போலீஸ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

"மாஸ்க்கை இப்படி அணியுங்கள்" மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மும்பை போலீஸ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!

 மும்பை போலீஸ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு

மும்பை போலீஸ் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு

ம்பை போலீஸ் வெளியிடும் இதுபோன்ற நகைச்சுவையான வார்னிங் பதிவுகளுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு

சமீப காலமாகவே மும்பை போலீசார் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தை கையில் எடுத்து வருகின்றனர். மேலும், சட்டவிரோத செயல்களுக்கு காவல்துறை தக்க பதிலடி கொடுக்கும் என்பதை உணர்த்தும் வகையில் வேடிக்கையான சில சம்பவங்களை மீம் மற்றும் ட்ரோல் வீடியோ போன்று வடிவமைத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும், மும்பை போலீஸ் வெளியிடும் இதுபோன்ற நகைச்சுவையான வார்னிங் பதிவுகளுக்கு ஏராளமான ரசிகர்களும் உண்டு.

அந்த வகையில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முகக்கவசங்களை சரியாக அணிவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவூட்டுவதற்காக மும்பை காவல்துறை ஒரு புதுமையான பதிவினை சமீபத்தில் பகிர்ந்து கொண்டது. மும்பை காவல்துறை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த பதிவில் மொத்தம் நான்கு படங்கள் இடம்பெற்றிருந்தன.

அதில், முதல் மூன்று படங்களில் ஆங்கில சொற்களும் அவற்றின் சரியான உச்சரிப்பும் இருந்தது. நான்காவது படத்தில் முகக்கவசம் அணிந்த ஒரு கிராபிக்ஸ் முகம் இருந்தது. அதில் தனது மூக்கு மற்றும் வாயை முழுவதுமாக முகக்கவசத்தால் மறைத்தபடி வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த படத்தில் முகக்கவசத்தை அணிவதற்கான சரியான வழி இது தான் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மும்பை காவல்துறை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் இதனை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே  அதிகமான லைக்ஸ்குகள் கிடைத்தன. மேலும், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தாக்கம் அதிகரித்துள்ள சமயத்தில் இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ஒருபுறம் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி வந்தாலும், நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது மஹாராஷ்டிரா தான்.

வைரஸின் இரண்டாம் அலை தாக்கமும் இங்கு தான் அதிகம். கடந்த 24 மணி நேரத்தில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகளும் 376 இறப்புகளும் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மும்பை காவல்துறை பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை சுவாரசியமான முறையில் நடத்தி வருகிறது.

அதேபோல பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், சில சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதையும் விளக்க பல ட்ரோல் வீடியோக்களை நகைச்சுவையாக வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

  

பொதுவாக மக்கள் ஏதேனும் ஒரு விஷயம் குறித்து காவல்துறையில் புகார் அளிப்பதற்கு யோசிப்பார்கள். பலர், காவல்துறை அதிகாரிகளிடம் சென்று புகார் அளிக்கும்போது கூட பதட்டமாக உணர்வார்கள். ஆனால் தற்போது மும்பை காவல் துறையின் ஆன்லைன் அவதாரம் மற்றும் அவர்களின் இத்தகைய பதிவுகள் மக்களுக்கு எந்த விதமான அசௌகரியத்தையும் கொடுக்கவில்லை.

மேலும் மும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் மக்களின் சிறிய புகார்களைக் கூட காவல்துறைக்கு சென்றடைவதை எளிதாக்கியுள்ளது. காவல்துறையினரும் குடிமக்களுக்கு உதவும் நோக்கத்திற்காக ஒரு நட்பான தோற்றத்தை உருவாக்க சமூக வலைதள கணக்குகளை மிகுந்த பலத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sankaravadivoo G
First published:

Tags: CoronaVirus, Mask, Mumbai Police, Social media

அடுத்த செய்தி