ஹேக்கர்களுக்கு எதிராக வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்...!

வேடிக்கையான வீடியோவை வெளியிட்ட மும்பை காவல் துறையினர்

மும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் வெவ்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாப் கலாச்சாரம், மீம்ஸ்கள் அல்லது பிரபலமான ஏதேனும் ஒரு வீடியோவை பயன்படுத்தி வருகிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நகைச்சுவையாக வார்னிங் கொடுப்பதில் பெயர் பெற்றவை. ஏனெனில் அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு பதிவுகளும் இணையம் முழுவதும் பல இதயங்களை வென்று வருகின்றன. மும்பை காவல்துறையின் சமூக ஊடக கணக்குகள் வெவ்வேறு விஷயங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த பாப் கலாச்சாரம், மீம்ஸ்கள் அல்லது பிரபலமான ஏதேனும் ஒரு வீடியோவை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும், அவர்களின் பதிவுகளுக்காகவே மும்பை போலீசின் ஊடக கணக்கை பலர் பின்தொடருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பதிவில், ஹேக்கர்களை ட்ரோல் செய்ய மும்பை காவல்துறை பிரபல துருக்கிய ஐஸ்கிரீம் விற்பனையாளர்களின் உதவியை நாடியுள்ளது. துருக்கி ஐஸ்கிரீம் விற்பனையாளர்கள் டோண்டுர்மா என்ற ஐஸ்கிரீமை விற்கும் ஒரு பொதுவான நிகழ்வு தான் அது. இந்த வகை ஐஸ்கிரீம்கள் உருகவோ, சொட்டவோ செய்யாது. சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அதைவிட இந்த துருக்கிய ஐஸ்கிரீமின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் அதன் விற்பனையாளர்கள் தான்.

அவர்கள் கோன்களில் ஐஸ்கிரீமை தடவி அதனை வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு பல்வேறு கைதந்திரங்களை செய்வார்கள். உங்கள் கைகளில் அந்த கோன் ஐஸ்கிரீம்களை கொடுப்பது போல வந்து மீண்டும் எடுத்துக்கொள்வார்கள். அதனை, பலர் ரசித்து அவர்களுடன் விளையாடுகையில், சிலர் கோபப்படுவார்கள். சமீபத்தில் கூட சிறுவன் தனக்கு ஐஸ்கிரீம் வழங்காத துருக்கி விற்பனையாளரிடம் சண்டைக்கு சென்ற காட்சிகள் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

Also read... தென்கொரியாவில் ரூ.3 கோடி மதிப்பிலான ஓவியம் சேதம் - 2 பேர் கைது

இந்த நிலையில், மும்பை காவல்துறை இதேபோன்ற ஒரு வீடியோவை வைத்து ஹேக்கர்களுக்கு ஒரு ஸ்ட்ராங் மெஸேஜை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி ஐஸ்கிரீம் சாப்பிடக் காத்திருக்கும் வாடிக்கையாளரிடம் விற்பனையாளர் தனது கைவரிசையை காட்டியதால் வாடிக்கையாளர் மிகவும் எரிச்சலடைந்து காணப்படும் வீடியோவை மும்பை போலீசார் பகிர்ந்து கொண்டனர். மேலும் அந்த பதிவில் “வலுவான கடவுச்சொற்களைக் கொண்டு கணக்குகளில் சேர முயற்சிக்கும் ஹேக்கர்களுக்கு ” என்று கேப்சன் செய்துள்ளது. அதாவது, எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எங்கள் கணக்குகளை ஹேக் செய்ய முடியாது என மும்பை போலீஸ் ஹேக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
View this post on Instagram

 

A post shared by Mumbai Police (@mumbaipolice)


இந்த வீடியோ கிட்டத்தட்ட 95,000 தடவைகள் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 15,000க்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றது. புத்திசாலித்தனமான கேப்சனை பாராட்டி, பல்வேறு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். இதற்கு முன்னர், கொரோனா வைரஸின் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அவர்கள் தொடர்ச்சியான புதுமையான விளம்பரங்களைப் பகிர்ந்து வந்தனர். 
View this post on Instagram

 

A post shared by Mumbai Police (@mumbaipolice)


சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், பேட்மேன், தி ஃப்ளாஷ் மற்றும் வொண்டர் வுமன் ஆகியோரின் அடையாளங்களுடன் ஒரு முகக்கவசத்தையும் சேர்த்து ஜஸ்டிஸ் லீக்கின் மற்றொரு படைப்பு என்று கேப்சன் செய்திருந்தது.மேலும், “நீங்களே ஒரு‘ நீதியைச் ’செய்து, பாதுகாப்பின்‘ லீக்கில் ’நுழையுங்கள். முகக்கவசங்களை அணியுங்கள்." என்று குறிப்பிட்டிருந்தது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: