கொரோனா விழிப்புணர்வு - மும்பை காவல்துறையின் வித்தியாசமான முயற்சி!

மும்பை காவல்துறையின் வித்தியாசமான முயற்சி

பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில் விழிப்புணர்வு முயற்சிகளும் காவல்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த மும்பை காவல்துறையின் நூதன முயற்சி நெட்சன்களிடையே வரவேற்பையும், கோபத்தையும் ஒருசேர பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள அதே வேளையில் விழிப்புணர்வு முயற்சிகளும் காவல்துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் எக்ஸ் மேன் (X-Men ) கதாபாத்திரமான மேக்னெட்டோவை (Magneto) வைத்து மாஸ்க் விழிப்புணர்வை சமூகவலைதளங்களில் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் எதிர்ப்பார்ப்புக்கு அதிகமாக பரவியிருப்பதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. உயிர்காக்கும் கருவிகள் கிடைக்காமல் மக்கள் தடுமாறி வருகின்றனர். குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இறந்தவர்களின் உடலை எரிக்கக்கூட இடம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. மயானங்கள் நிரம்பி வழிவதால் வீதிகளிலும், சாலையோரங்களிலும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை மக்கள் எரித்து வருகின்றனர்.

மிகவும் கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படும் சூழலில் அனைத்து மாநில காவல்துறையினரும், வித்தியாசமான முறைகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். திரைப்பட கதாபாத்திரங்கள், பிரபல கேம் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் மும்பை நகர காவல்துறை எக்ஸ்மேன் -ல் பிரபலமான கேரக்டராக இருக்கும் மேக்னெட்டோ (Magneto) மூலம் அம்மாநில மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

மேக்னெட்டோ கதாபாத்திரத்தைப் பயன்படுத்தி மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்றும், கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் மீம்களின் வழியாக காவல்துறையினர் எடுத்துரைத்து வருகின்றனர். காவல்துறையினரின் இந்த வித்தியாசமான முயற்சி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெட்டிசன்கள் பலரும் காவல்துறையின் முயற்சிக்கு துணை நிற்பதாவும் தெரிவித்தனர். ஆதரவு ஒருபுறமிருக்க எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Also read... கோவிட்-19 ஊரடங்கு: வேலையில்லா தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் மும்பை உணவகம்!

அதாவது, அரசியல்வாதிகளை ஒருவிதமாகவும், பொதுமக்களை ஒருவிதமாகவும் காவல்துறை அணுகுவதாக நெட்டிசன்கள் சாடியுள்ளனர். மாஸ்க் அணியாமல் மக்கள் வெளியில் நடமாடினால் அபராதம் விதிக்கும் காவல்துறையினர், அரசியல்வாதிகளிடம் அவ்வாறு நடந்துகொள்வதில்லை என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளனர். விழிப்புணர்வு மற்றும் விதிமுறைகள் எல்லாம் சாதாரண மக்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டும் அரசியல்வாதிகள் மற்றும் பணக்காரர்களுக்கு அல்ல எனவும் காவல்துறையினரிடம் நெட்டிசன்கள் முறையிட்டுள்ளனர்.

2வது அலை மிக கடுமையாக பாதித்த மாநிலங்களில் மும்பை நகரத்தை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலமும் ஒன்று. அந்த மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 68 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். பரவல் விகிதத்தைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளையும், முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதும் அம்மாநிலத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: