ஊரடங்கில் காதலியை பார்க்க விரும்பிய நபரின் டீவீட்டுக்கு மும்பை போலீஸ் கொடுத்த பக்குவமான அட்வைஸ்!

மும்பை போலீஸ்

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை மாற்றிய பிறகு பல இளைஞர்கள் தொடர்ந்து மும்பை காவல்துறையினரிடம் கேட்டு வரும் கேள்வி இதுதான்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனா ஊரடங்கு உத்தரவின் போது காதலியை சந்திக்க எந்த வண்ண ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்?. வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக மஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு விதிகளை மாற்றிய பிறகு பல இளைஞர்கள் தொடர்ந்து மும்பை காவல்துறையினரிடம் கேட்டு வரும் கேள்வி இதுதான்.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மஹாராஷ்டிரா தான். மேலும், அதிகரித்து வரும் கொரோனா தோற்று காரணமாக சில ஊரடங்கு உத்தரவுகளும் போடப்பட்டுள்ளன. அதில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைமுறைக்கு வந்த கொரோனா ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் போக்குவரத்தை கட்டுப்படுத்த அத்தியாவசிய வாகனங்களுக்கு வண்ண குறியீட்டு ஸ்டிக்கர்களைப் பயன்படுத்த மும்பை காவல்துறை முடிவு செய்ததது. இதற்கான அறிவிப்பையும் காவல்துறை வெளியிட்டிருந்தது.

அதன்படி ஊரடங்கின் போது சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய வண்ண குறியீடுகளைக் கொண்ட வாகனங்கள் மட்டுமே சாலையில் அனுமதிக்கப்படும் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, மும்பை நகர காவல் துறையின் ட்விட்டர் பக்கம் நூற்றுக்கணக்கான SOS செய்திகளால் நிரம்பி வழிந்தது. மேலும் தங்களது சந்தேகங்களை தெளிவுப்படுத்த மும்பை காவல்துறைக்கு பல அழைப்புகளும் விடுக்கப்பட்டுள்ளது. தெளிவுப்படுத்தக்கோரி வந்த பெரும்பாலான கோரிக்கைகள் உண்மையானவை என்றாலும், அவசரத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க மும்பை காவல்துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.

Also read... முதியவரை காப்பாற்றிய பெண் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அந்தவகையில், மும்பையில் வசிப்பவரும், ட்விட்டர் யூசருமான அஸ்வின் வினோத் தனது காதலியைச் சந்திக்க தனது வாகனத்தை வெளியே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், இதற்கு எந்த நிற ஸ்டிக்கரின் பயன்படுத்த வேண்டும் என்பதை அறியவும் விரும்பியுள்ளார். தனது பதிவில் மும்பை பொலிஸைக் டேக் செய்து எழுதிய வினோத், “வெளியே சென்று என் காதலியைச் சந்திக்க நான் என்ன ஸ்டிக்கர் பயன்படுத்த வேண்டும்? நான் எனது காதலியை மிஸ் பண்ணுகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மிகுந்த மரியாதையுடனும், பக்குவமாகவும் பதிலளித்த மும்பை காவல்துறை, "உங்கள் காதலியை நேரில் சந்திக்க ஆசைபடுவது உங்களுக்கு இன்றியமையாதது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது எங்கள் அத்தியாவசிய வராது அவசர சூழ்நிலைகளின் கீழ் வராது. இந்த காலகட்டத்தில், தூரம் தான் உங்கள் காதலை மேலும் வளர்க்கும். அதேபோல நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க வாழ்த்துகிறோம்" என்று பதிலளித்துள்ளது. கொரோனா ஊரடங்கில் காதல் வேண்டாம் என கூறவில்லை காதலியை சந்திக்க விரும்புவது இந்த சமயத்தில் அத்தியாவசியமற்ற நடவடிக்கை என்பதை மும்பை காவல்துறை தெளிவுப்படுத்தியுள்ளது.

போலீசாரின் இந்த பக்குவமான பதில்கள் நெட்டிசன்களிடம் அமோக ஆதரவை பெற்றுள்ளன. மும்பை காவல்துறை தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் கொரோனா தொடர்பான விழிப்புணர்வுகளை வித்தியாசமாக பதிவிடுவதன் மூலம் நெட்டிசன்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மும்பை காவல்துறை கடந்த வாரம் அத்தியாவசிய சேவைகள் பிரிவில் வாகனங்களுக்கு வண்ணக் குறியீடுகளை வழங்கத் தொடங்கியது.

மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் மற்றும் மருத்துவ சப்ளையர்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பிரிவில் ஈடுபடுபவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாதபடி இருக்க இந்த வண்ண குறியீடுகள் முக்கியமானதாக இருக்கும் என்று மும்பை போலீஸ் கமிஷனர் ஐ.பி.எஸ் ஹேமந்த் நாக்ரலே தெரிவித்திருந்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
First published: