ஒருதலை காதல் கொடூரம்... இளம்பெண்ணை ஓடும் ரயில் மீது வீசிய இளைஞன் - அதிர்ச்சி வீடியோ

வீடியோ காட்சி

ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சுமேஷ் யாதவை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • Share this:
    காதலை ஏற்க மறுத்த 21 வயது இளம்பெண்ணை ஓடும் ரயில் மீது இளைஞர் வீசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஒரு தலை காதலால் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மும்பையில் காதலை ஏற்காத இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் மீது வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை கார் ரயில் நிலையத்தில் சுமேஷ் ஜாதவ் என்ற இளைஞர் காதலை ஏற்க மறுத்த பெண்ணை ரயில் மீது வீசி உள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பெண் உயிர் பிழைத்தாலும் தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஓடிய சுமேஷ் யாதவை 12 மணி நேரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சுமேஷ் யாதவ் பெண்ணை ரயில் மீது வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



    இந்த சம்பவம் தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண்ணும் இளைஞரும் 2 வருடங்களுக்கு முன் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளனர். இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில் அந்த இளைஞர் குடிப்பழக்கம் உடையவர் என்பது தெரிந்த உடன் அவருடான நட்பை முறித்து கொண்டுள்ளார். ஆனால் அந்த இளைஞர் அந்த பெண்ணை தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்த இளைஞர் குறித்து புகார் அளித்த போதும் பின் தொடர்வதை அந்த இளைஞர் நிறுத்தவில்லை“ என்றுள்ளார்.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கைது செய்யப்பட்ட சுமேஷ் ஜாதவ் விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பரபரப்பான மும்பை ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
    Published by:Vijay R
    First published: