அமேசானில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு ரெட்மி நோட் 10 கிடைத்த ஆச்சர்யம்!

மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 டெலிவரி

ர்டரை ரிட்டர்ன் செய்யலாம் என்று பார்த்தால், மவுத்வாஷ் நுகர்வுக்குரிய தயாரிப்பு என்பதால் ரிட்டர்ன் ஆப்ஷன் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆப் வழியாக தன்னால் ரிட்டர்ன் செய்ய முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார்.

  • Last Updated :
  • Share this:
ஒரு வினோதமான சம்பவத்தில், ஆன்லைனில் கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பை நபருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 டெலிவரி செய்யப்பட்டள்ளது . இந்த நிகழ்வை தனது மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரில் பகிர்ந்துகொண்ட, லோகேஷ் தாகா என்ற அந்த நபர், இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானையும் டேக் செய்துள்ளார். அதில் அவர் பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்டின் படி, டெலிவரி செய்யப்பட்ட பெட்டியில் அவர் ஆர்டர் செய்த நான்கு கோல்கேட் மவுத்வாஷ் பாட்டில்கள் இருப்பதாக காட்டப்பட்டது.

மேலும் அந்த பார்சலுக்கு ரூ.396 கட்டணம் செலுத்தியதாக பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஆர்டரை மே 10ம் தேதி அன்று அமேசானில் பிளேஸ் செய்ததாக மும்பை நபர் லோகேஷ் தாகா தெரிவித்துள்ளார். ஆனால் பார்சலை திறந்த பார்த்த போது ரெட்மி நோட்10 ஸ்மார்ட்போன் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சரி, இந்த ஆர்டரை ரிட்டர்ன் செய்யலாம் என்று பார்த்தால், மவுத்வாஷ் நுகர்வுக்குரிய தயாரிப்பு என்பதால் ரிட்டர்ன் ஆப்ஷன் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆப் வழியாக தன்னால் ரிட்டர்ன் செய்ய முடியவில்லை" என்று பதிவிட்டிருந்தார். இதனை லோகேஷ் தாகா, கடந்த வியாழக்கிழமை (மே 13) அன்று ட்வீட் செய்திருந்தார். ஆர்டர் செய்யப்பட்ட பார்சலில் கிட்டத்தட்ட 13,000 ரூபாய் மதிப்புள்ள ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இருந்ததைக்கண்டு திகைத்துப்போன வாடிக்கையாளர் அந்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் அமேசானில் இருந்து உண்மையில் பெற விரும்பியது மவுத்வாஷ் மட்டுமே, ஆனால் அதற்கு பதிலாக பெட்டியில் ஸ்மார்ட்போன் கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

https://twitter.com/lokeshdaga/status/1392735032754642947

மேலும் தனது அடுத்தப்பதிவிலேயே, ஆர்டர் செய்யபட்ட பார்சல் மாறியிருந்ததையும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஏனெனில் பெட்டியை பிரித்து பார்த்த பிறகு அதில் ஸ்மார்ட்போனுக்கான இன்வாய்ஸ் இருந்ததையும், அதில் தெலுங்கானவைச் சேர்த்த வேறு ஒரு நபரின் பெயர் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது ஒன்றும் முதல்முறை நடந்த சம்பவம் அல்ல. ஏற்கனவே அதிக முறை இந்த குளறுபடிகள் நடந்திருப்பதாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், சீனாவை சேர்த்த லியு என்ற பெண் ஆன்லைனில் ஐபோன் 12 புரோ மேக்ஸை ஆர்டர் செய்திருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்த பெட்டியில் ஒரு பாட்டில் ஆப்பிள் சுவை கொண்ட தயிர் பானம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். லியு தான் ஆர்டர் செய்த புதிய ஐபோனுக்காக, சுமார் 1,500 அமெரிக்க டாலர்களை செலுத்தியிருந்தார். மேலும் அவர் அந்தப் பேக்கேஜை ஆர்டர் செய்த பிறகு அதன் டெலிவரிக்காக ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் தொலைபேசிக்கு பதிலாக ஒரு பாட்டில் பானத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஈபே (eBay) அல்லது அமேசான் (Amazon) போன்ற மூன்றாம் தரப்பு விற்பனையாளர்களிடமிருந்து பொருட்களை ஆர்டர் செய்யும் போது இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பொதுவானவை என்றாலும், சீன பெண் மொபைல் போனை ஆப்பிளின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நேரடியாக ஆர்டர் செய்துள்ளார். போனின் அதிகாரபூர்வ தளத்தில் ஆர்டர் செய்தது எவ்வாறு மாறும் என்று குழப்பமடைந்ததாக தெரிவித்துள்ளார். லியு இந்த சம்பவத்தின் வீடியோவை சீன சமூக ஊடக தளமான வெய்போவில் (Weibo) பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து புகார் அளித்ததையடுத்து, ஆப்பிள் மற்றும் அந்நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்களை டெலிவரி செய்யும் கொரியர் சேவை நிறுவனமான எக்ஸ்பிரஸ் மெயில் சர்வீஸ், ஆகியவை இணைந்து இந்த விவகாரத்தை விசாரிப்பதாகக் கூறியிருந்தது. மேலும் கிடைத்த தகவல்களின்படி, ஆர்டர் செய்யப்பட்ட போன் அந்த பெண்ணிடம் நேரடியாக வழங்கப்படவில்லை என்றும், மாறாக அதை ஒரு ஸ்டோரேஜ் யூனிட்டிடம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: