Home » News » Trend

சுஷாந்த் சிங் காதலி என நினைத்து மும்பை நபருக்கு செல்லும் போன்கால்கள் - நம்பரை மாற்றவேண்டிய அளவுக்கு அவதி

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி என்று நினைத்து மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றதால் அந்த நபர் கடும் அவதியடைந்துள்ளார்.

சுஷாந்த் சிங் காதலி என நினைத்து மும்பை நபருக்கு செல்லும் போன்கால்கள் - நம்பரை மாற்றவேண்டிய அளவுக்கு அவதி
ரியா சக்ரபோர்த்தி
  • Share this:
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் மாதம் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கை தற்போது சி.பி.ஐ விசாரித்துவருகிறது. மேலும், சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என்று சுஷாந்தின் தந்தை பீகார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

அதுதொடர்பாக பீகார் காவல்துறையும் விசாரணை நடத்திவருகிறது. இதற்கிடையில், சுஷாந்த் சிங்குக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்து தொலைக்காட்டிசிய்ல காண்பிக்கும்போது ரியாவின் செல்போன் எண்ணை முழுவதுமாக அல்லாமல் அறைகுறையாக காட்டியுள்ளனர். அதனையடுத்து, தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நம்பருக்கும் பலரும் அழைப்புவிடுத்துள்ளனர்.

அதனால், மும்பையைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் செல்போன் எண்ணுக்கும், ரியா சக்ரபோர்த்தியின் எண்ணுக்கும் ஒரு நம்பர்தான் வித்தியாசம். அதனால், அவருக்கு 200-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. தொடர் அழைப்புகளால் வெறுப்படைந்த அவர், அவரது செல்போனை எண்ணை அணைத்துவைத்துள்ளார். அவர், தற்போது மொபைல் எண்ணை மாற்றிவிடலாமா என்ற யோசனையில் இருந்துவருகிறார்.
First published: August 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading