ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாதம் தவறாமல் ஃபைன் போடும் போலீஸ்.. கடுப்பான மும்பைக்காரர்.. என்னதான் நடந்தது?

மாதம் தவறாமல் ஃபைன் போடும் போலீஸ்.. கடுப்பான மும்பைக்காரர்.. என்னதான் நடந்தது?

நம்பர் பிலேட் மாற்றப்பட்ட வாகனம்

நம்பர் பிலேட் மாற்றப்பட்ட வாகனம்

மும்பையில் ஒருவர் மாதம் மூன்று முறை சாலை விதிமுறையை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் அது தன்னுடைய வண்டியே இல்லை என்று புலம்பி வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Mumbai, India

  மும்பையில் ஹொண்டா அக்டீவா இரு சக்கர வாகனம் சாலை விதிகளைத் தொடர்ந்து மீறுவதாகப் போக்குவரத்து காவல்துறை உரிமையாளருக்கு அபராதம் விதித்து சலான் அனுப்பியுள்ளனர். ஆனால் அது கார் வைத்து இருக்கும் நபருக்கு மாதம் மாதம் வந்துள்ளது.

  அதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் பல முறை போக்குவரத்து காவல்துறை செயலியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எதனால் இரு சக்கர வாகன அபராதம் தனக்கு வருகிறது என்று ஆராய்ந்ததில் அந்த வண்டியில் நம்பர் தவறாகத் தெரிவது தான் என்று கண்டுபிடித்துள்ளார். சாலை விதிகளை மீறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் ஹொண்டா அக்டீவா இரு சக்கர வாகன ஓட்டுநரின் வண்டி எண் MH020EJ0759. இவரின் காரின் நம்பர் MH02FJ0759.

  அக்டீவா வைத்திருக்கும் அந்த நபரின் நம்பரில் சிறிய மாற்றம் செய்த காரணத்தினால் அபராதம் இவருக்கு வந்துள்ளது. இதனை ஆதாரங்களோடு கண்டறிந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு போக்குவரத்து காவல் உதவியை அவர் நாடியுள்ளார்.

  Also Read : சாப்பிட்டால் ரத்தம் வழியும்! ஆர்டர் செய்த பீட்சாவில் சில்லுசில்லாய் கிடந்த கண்ணாடித்துண்டுகள்!

  அவர் பதிவிட்ட புகைப்படத்தில் அந்த நபரின் வண்டியில் உள்ள நம்பர் MH020EJ0759-யில் நடுவில் உள்ள E க்கு பதில் F என்று தெரிகிறது. அதனால் தான் காவல்துறை இவரின் காருக்கு டூவிலர் அபராதத்தை அளித்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

  இது போல் நம்பர் பிளேட்டில் மாற்றங்கள் செய்து வழக்கமாகச் சிலர் சாலை விதிகளை மீறி வருகின்றனர். ஆனால் அதற்கு எந்த அளவிற்கு நிவாரண கிடைக்கப்படுகிறது என்பது மாதம் மாதம் அபராதம் பெரும் இந்த நபரைப் பார்த்தால் தெரிகிறது என்று நெட்டிசன்கள் இணையத்தில் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Fine for over speed, Mumbai, Vehicle, Viral News