• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • வித்தியாசமாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மும்பை நபர் - நெட்டிசன்கள் விமர்சனம்!

வித்தியாசமாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மும்பை நபர் - நெட்டிசன்கள் விமர்சனம்!

வித்தியாசமாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மும்பை நபர்

வித்தியாசமாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய மும்பை நபர்

இதனிடையே நாட்டின் முன்னணி ஊடகம் ஒன்று இந்த வீடியோவை தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து, "மும்பையில் ஒரே நேரத்தில் 550 கேக்குகளை வெட்டி ஒருவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் நிகழ்வின் போது, மக்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி ஒன்று திரண்டனர்" என்று கூறி இருக்கிறது.

  • Share this:
மற்ற எந்த நாளையும் விட ஒவ்வொருவரும் தங்களது பிறந்தநாளின் போது மற்றவர்களுக்கு தங்கள் ஸ்பெஷலான நபராக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தங்களது பிறந்தநாளை சிலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடனும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக நேரத்தை செலவிடுவதன் மூலம் கொண்டாடுகிறார்கள். ஒரு சிலர் தங்கள் பிறந்தநாளை முடிந்த வரை பிரமாண்டமாக மற்றும் மறக்க முடியாத நாளாக மாற்ற ஆசைப்பட்டு அதற்கேற்றவாறு ஏற்பாடுகளை செய்து கொண்டாடுவார்கள்.

சிலர் பெரிய விருந்தை ஏற்பாடு செய்து தாங்களும் மகிழ்ந்து, பிறரையும் மகிழ்விப்பார்கள். எப்படியாக இருந்தாலும் பிறந்தநாளன்று கேக் வெட்ட பெரும்பாலானோர் தவறமாட்டார்கள். இந்த கேக் வெட்டும் சம்பிரதாயத்தை வேறு ஒரு லெவலுக்கு எடுத்து சென்றுள்ளார் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மும்பையில் சமீபத்தில் தன் பிறந்தநாளை வித்தியாசமாக கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் சூர்யா ரதுரி என்ற நபர்.

இவர் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 550 கேக்குகளை வரிசையாக வெட்டி வித்தியாசமாக தன் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இரு கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு வளைத்து வளைத்து இவர் கேக் வெட்டும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 3 நிமிடங்கள் வரை ஓட கூடிய அந்த வீடியோவில் மூன்று பெரிய நீளமான டேபிள்கள் முழுவதும் நூற்றுக்கணக்கான மற்றும் வகை வகையான கேக்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. தனது 2 கைகளிலும் கத்தியை வைத்து கொண்டு வண்ணமயமான கேக்குகளை மிதமான வேகத்தில் கட் செய்து கொண்டே செல்கிறார் பர்த்டே பாய் சூர்யா ரதுரி. ஒரு சில கேக்குகளுக்கு பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் மத்தாப்பு வகை பட்டாசுகள் கலர்ஃபுல்லாக எரிகிறது. அவரை சுற்றி நிற்கும் பலரும் சூர்யா ரதுரி கேக்குகளை கட் செய்து கொண்டே செல்லும் அந்த தனித்துவ நிகழ்வை தங்களது மொபைலில் வீடியோ எடுக்கின்றனர். மேலும் அங்கிருந்த பலர்
கோவிட் -19 கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருந்ததையும் இந்த வீடியோ மூலம் பார்க்க முடிகிறது.இதனிடையே நாட்டின் முன்னணி ஊடகம் ஒன்று இந்த வீடியோவை தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து, "மும்பையில் ஒரே நேரத்தில் 550 கேக்குகளை வெட்டி ஒருவர் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் நிகழ்வின் போது, மக்கள் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறி ஒன்று திரண்டனர்" என்று கூறி இருக்கிறது.

Also read... மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை - அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்!

இந்த வீடியோவை பார்த்த பலரும், தொற்று நீடிக்கும் நேரத்தில் இப்படியா ஊரை கூட்டி பிறந்தநாளை கொண்டாடுவது என்று விமர்சனம் செய்துள்ளார்கள். பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பலரும் மாஸ்க் அணியவில்லை மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட தொற்று தடுப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை. எனவே உள்ளூர் காவல்துறை மற்றும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட்ஸ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: