Home /News /trend /

இதென்னடா பீட்சாவுக்கு வந்த கொடுமை... உணவுப்பிரியர்களை மிரளவைத்த வீடியோ.!

இதென்னடா பீட்சாவுக்கு வந்த கொடுமை... உணவுப்பிரியர்களை மிரளவைத்த வீடியோ.!

Black Pizza (Source: Instagram)

Black Pizza (Source: Instagram)

Black Cheese Pizza | பீட்சா என்றாலே சீஸ் பீட்சா, சிக்கன் பீட்சா, வெஜ் பீட்சா, காளான் பீட்சா, தந்தூரி சிக்கன் பீட்சா உள்ளிட்ட பல வகைகளை கேள்விப்பட்டிருப்போம். தற்போது இந்த பட்டியலில் கருப்பு நிற பீட்சா ஒன்று லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
உணவு பிரியர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஏராளமான வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. போதாக்குறைக்கு அவ்வப்போது வித்தியாசமான உணவுகள் பற்றிய வீடியோக்கள் வேறு வெளியாகி உணவுப்பிரியர்களை மிரள வைக்கின்றன. தற்போது பீட்சா பற்றி வெளியாகியுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. பீட்சா என்றாலே சீஸ் பீட்சா, சிக்கன் பீட்சா, வெஜ் பீட்சா, காளான் பீட்சா, தந்தூரி சிக்கன் பீட்சா உள்ளிட்ட பல வகைகளை கேள்விப்பட்டிருப்போம். தற்போது இந்த பட்டியலில் கருப்பு நிற பீட்சா ஒன்று லேட்டஸ்ட்டாக இணைந்துள்ளது.

பீட்சா என்பது பலருக்கும் பிடித்த துரித உணவாகும். பல ஆண்டுகளாக பீட்சாவில் பல சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. கத்தரிக்காய், அன்னாச்சி பழம் ஆகியவற்றைக் கொண்டு கூட பீட்சாக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பீட்சாவை பற்றி சொன்னாலே, உருகும் சூடான சீஸ் மற்றும் மேற்புறத்தில் அடுக்கப்பட்ட சுவையான காய்கறிகள் அடங்கிய கலர்ஃபுல் உருவம் தான் நம் கண்முன் தோன்றும். பீட்சாவைப் பற்றி நினைக்கும் போதே சுவை அரும்புகள் தூண்டப்பட்டு, சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆசை உருவாகும்.

பல உணவகங்கள், கஃபேக்கள், பீட்சா செயின்கள் மற்றும் தெருவோர கடைகள் என நீங்கள் நினைக்கும் இடத்தில், நினைக்கும் நேரத்தில் அதனை வாங்கி சுவைக்க முடியும். பொதுவாக, பீட்சா, நமக்குத் தெரிந்தபடி, நீங்கள் எங்கு சென்றாலும் எப்போதும் ஒரே மாதிரியான உணவாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம், மக்கள் சில சுவாரஸ்யமான திருப்பங்களுடன் புதிய வகையான பீட்சாக்களை சுவைக்க விரும்புகின்றனர். சமீபத்தில் மும்பை உணவகம் ஒன்று கருப்பு நிற பீட்சாவை தயாரித்துள்ளது. இந்த கருப்பு பீட்சா பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.




இன்ஸ்டாகிராம் யூஸரான மயங்க் ஷா (@flavoursoftravels) என்பவர் ஷேர் செய்துள்ள வீடியோவில், தனித்துவமான கருப்பு நிற பீட்சா தயாரிப்பை பார்க்கலாம். 'பீட்சா பை இன்ஜினியர்ஸ்' என்ற உணவகம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கருப்பு நிற பீட்சா வீடியோவை பதிவிட்டுள்ளனர். அதற்கு ‘பிளாக் ஹோல் பீட்சா’ என பெயர் வைத்துள்ளனர். இதில் கருப்பு நிற அடிப்பாகம் மற்றும் சீஸ் உள்ளது. மேலும், இந்த உணவு FDA-அங்கீகரிக்கப்பட்டதாகவும் செயற்கை நிறங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : கோக் மற்றும் ஓரியோவில் ஆம்லெட்டா.? வைரலாகும் புதிய வீடியோ.!

இந்த வீடியோ பதிவேற்றப்பட்டதிலிருந்து, இது 722K பார்வைகளைப் பெற்றுள்ளது, 34.6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. இதற்கு பலரும் கலவையான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். ஒரு யூஸர் "யாரோ பீட்சாவில் சிமெண்டை சேர்த்தது போல் தெரிகிறது" என கலாய்த்துள்ளார். மற்றொருவர் "அடிப்படை மாவு பகுதி கருப்பாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் சீஸ் கருப்பாக இருப்பது பிடிக்கவில்லை” என பதிவிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இதென்னடா பீட்சாவிற்கு வந்த கொடுமை என ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

 
Published by:Selvi M
First published:

Tags: Food, Trending

அடுத்த செய்தி