மூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் கேட் தேர்வில் தேர்ச்சி : ஐ.ஐ.எம்-ல் நுழைந்தார்

மும்பையை சேர்ந்த 'யாஷ் அவதேஷ் காந்தி' என்ற 21 வயது மாணவர் 'கேட் - 2019' தேர்வில் 92.5 சதவீத மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் தற்போது ஐ.ஐ.எம்-லக்னோவின் மாணவனாக சேர்ந்து கடந்த ஒரு மாத காலமாக தனது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகிறார்.

மூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர் கேட் தேர்வில் தேர்ச்சி : ஐ.ஐ.எம்-ல் நுழைந்தார்
ஐஐஎம் லக்னோ
  • News18 Tamil
  • Last Updated: September 10, 2020, 8:51 PM IST
  • Share this:
யாஷ் அவதேஷ் காந்தி பெருமூளை வாதம், டிஸ்லெக்ஸியா மற்றும் டைசர்த்ரியா ஆகியவற்றை எதிர்த்துப் போராடியே தற்போது ஐ.ஐ.எம் லக்னோவில் மாணவர் ஆகியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசிய யாஷ், "நான் ஏராளமான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளேன். எனவே குவான்டிடேட்டிவ் அபிலிட்டி எனும் பிரிவில் நான் கூடுதல் முயற்சியில் ஈடுபட வேண்டியிருந்தது. குறிப்பாக இது எனக்கு கடினமானதாக இருந்தது. ஆனால் சாத்தியமற்றதாக இல்லை" என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி எழுத்துத் தேர்வுகளை எழுத யாஷுக்கு ஒரு எழுத்தாளர் தேவையும் இருந்தது. மேலும் நடப்பதற்குக்கூட சிரமப்படும் அவர் இன்னும் மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்களில் பயணம் செய்கிறார். பொதுவாக ஒரு குழப்பத்துடன் பேசும் யாஷ், அவரது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் தெளிவாகத் தெரிவிக்கிறார். உண்மையில் யாஷின் கதை மற்ற இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.

Also read: கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் தொல்லியல்துறை இயக்குநர் உதய்சந்திரன் ஆய்வு - அருங்காட்சியகப் பணிகளைத் துரிதப்படுத்த அறிவுறுத்தல்


அவர் ஜூலை 2018ம் ஆண்டு முதலே, அதாவது அவர் தனது பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டு பயிலும் போதே, கேட் தேர்வுக்காக தயாராக தொடங்கிவிட்டார். இப்பொழுது அவரது கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது. மேலும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர், கோழிக்கோடு மற்றும் இந்தூர் உள்ளிட்ட பல ஐ.ஐ.எம்-களில் இருந்து அவருக்கு நேர்காணல் அழைப்புகள் வந்தன. ஆனால் அவர் உயர்ந்த ரேங்கை கொண்டுள்ள லக்னோவைத் தேர்ந்தெடுத்தார். பின்பு 2020-2022 ஆண்டின் கல்வி அமர்வுக்கான மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டின் கீழ் ஐ.ஐ.எம் லக்னோவில் அனுமதிக்கப்பட்டார்.

'யாஷ்' பெருமூளை வாதம், டிஸ்லெக்ஸியா மற்றும் டைசர்த்ரியா ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பேசத் தேவையான தசைகள் பலவீனப்பட்டுள்ளது. ஆனால் யஷின் பெற்றோர்கள் அவருக்கு முழு ஆதரவாக இருந்தனர்.

"யாஷ் பள்ளியில் படிக்கும்போதே, தனது படிப்பில் சிரமத்தை எதிர்கொண்டார். மேலும் சக மாணவர்களுடனும் போட்டியிட முடியவில்லை. ஆனால் அவர் படிப்படியாக தனது முயற்சியை அதிகப்படுத்தினார். அப்போது சாதாரண குழந்தைகளை விட அவர் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருந்தது" என்று தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் யாஷின் தந்தை அவதேஷ் காந்தி தெரிவித்துள்ளார்.Also read: கிளிகள் கூடு கட்டியிருப்பதால் சாகுபடியையே கைவிட்ட விவசாயி - நெகிழவைக்கும் சம்பவம்இருப்பினும், கேட் தேர்விற்குப் படிக்கும்போது யாஷ் மிகவும் மனச்சோர்வடைந்து, அவரது முயற்சியை கிட்டத்தட்ட கைவிட முடிவு செய்துள்ளார். அப்போது அவரிடம் "உனக்கு எதையும் செய்யக்கூடிய திறன் இருப்பதாகவும், முயற்சி செய்வதை நிறுத்தக் கூடாது என்றும் நான் சொன்னேன். அதற்குப் பிறகு, யாஷ் தனது முயற்சியை மீண்டும் தொடங்கினார்" என்று யாஷ்சின் அம்மா கூறியுள்ளார்.

அவர் மதியம் உணவு சமைக்கும் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் மிகவும் அமைதியானவராகவும், மிகவும் கடினமான சூழ்நிலைகளில் கூட தன்னை தயார் படுத்திக் கொள்வார். ஒருபோதும் தனது முயற்சியைக் கைவிடமாட்டார்.

அவருக்கு எழும் பிரச்சினை காரணமாக குறிப்புகளை எடுப்பதில் இருந்து நான் விலக்கு அளித்தாலும்கூட, அவர் எப்போதும் புள்ளிகளை குறித்துக் கொண்டே இருப்பார்" என்று அவரது ஆசிரியர் ஹர்ஷித் தெரிவித்துள்ளார். மேலும், 'யாஷ்' மும்பையில் உள்ள மிதிபாய் எனும் கல்லூரியில் கணக்கியல் பாடத்தில் பட்டம் பெற்று முதல் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading