நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமடைந்திருந்தாலும் குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நாளுக்கு நாள் மிக அதிகமான அளவில் தொற்று பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவிய தொற்றை அடுத்து மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14 இரவு 8 மணி முதல் வரும் மே 1 வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
சமீபத்திய இந்த விதிகளின்படி, எந்தவொரு நபரும் சரியான காரணமின்றி பொது இடத்தில் இருக்க அனுமதி கிடையாது. அத்தியாவசிய சேவைகளைத் தவிர, அனைத்து நிறுவனங்களும், பொது இடங்களும், செயல்பாடுகளும், சேவைகளும் மூடப்பட்டிருக்கிறது . திரைப்படங்கள், சீரியல்கள் மற்றும் விளம்பரங்களுக்கான படப்பிடிப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 25 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொற்றின் முதல் அலையிலிருந்தே பொருளாதார ரீதியாக மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இரண்டாம் அலை காரணமாக போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவு மேலும் அவர்களை மேலும் வாட்டி வதைக்கிறது. இதனிடையே கோவிட் -19 தொற்றின் எழுச்சியைக் கட்டுப்படுத்த தற்போதைய ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், மும்பையைச் சேர்ந்த ஒரு சைவ உணவகம், உணவு தேவைப்படுவோர் மற்றும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு விநியோகிக்கும் உன்னதமான செயலில் ஈடுபட்டுள்ளது.
Also read... மனைவியால் வந்த வினை... போலீஸிடம் மாட்டிக்கொண்ட கணவன்!
மும்பையின் வான்ட்ரா வெஸ்ட் (Wandra West) பகுதியில் அமைந்துள்ள எர்த் கஃபே (Earth Café) என்ற உணவகம் தான் இந்த புனித செயலை செய்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக வேலையற்றோர் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள அவர்களின் குழந்தைகளுக்கு எர்த் கஃபே உணவகம் இலவசமாக உணவுகளை வழங்கி வருகிறது. இது தொடர்பாக பேசிய உணவகத்தின் உரிமையாளர் வி கத்வானி, நாளொன்றுக்கு 150 உணவு பார்சல்களை வரை இவ்வாறு இலவசமாக வழங்கி வருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் பேசிய அவர், எங்கள் சமையல் கலைஞர்கள் தயாரிக்கும் ஆரோக்கியமான உணவான வெஜிடபிள் ரைஸ் புலாவ் அடங்கிய 150 உணவுப் பொட்டலங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இந்த பணியை சில நாட்களுக்கு முன்னர் தான் துவங்கினோம். இந்த உணவு பொட்டலங்களை வேலையற்ற நபர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு கொடுக்கிறோம் என்றார். ரம்ஜான் தொடங்கியவுடன், எங்கள் உணவகத்தின் தன்னார்வலர்கள் சிலர் மஹிம் தர்காவுக்கு வெளியே உணவு விநியோகிக்க சென்றனர். மேலும் மஹிம் தேவாலயத்திற்கு அருகில் உணவு வழங்கவும் அவர்கள் உதவி வருகிறார்கள் என்றும் உணவாக உரிமையாளர் கூறியுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.