₹420 பீர்-க்கு ₹87,000 பணத்தை இழந்த பெண்... கூகுள் பே மூலம் மோசடி!

பணப் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வது அவசியம் என்கின்றனர் காவல் துறையினர்.

Web Desk | news18
Updated: August 30, 2019, 7:17 PM IST
₹420 பீர்-க்கு ₹87,000 பணத்தை இழந்த பெண்... கூகுள் பே மூலம் மோசடி!
மாதிரி படம்
Web Desk | news18
Updated: August 30, 2019, 7:17 PM IST
கூகுளில் தேடி எடுத்த மொபைல் எண் மூலம் பீர் ஆர்டர் செய்த பெண்ணிடம் இருந்து 87 ஆயிரம் ரூபாயை மோசடி செய்யப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் ராதிகா பரேக். முதலீட்டு அலோசகர் ஆக உள்ளார். இவர் மூன்று பீர் பாட்டில் வாங்க ஸ்டார் வைன் ஷாப் என்ற கடையை தொடர்பு கொண்டுள்ளார். கூகுளில் தேடி எடுக்கப்பட்ட மொபைல் எண் மூலம் ராதிகா தொடர்புகொண்டு 3 பாட்டில் பீர் ஆர்டர் செய்துள்ளார்.

வைன் ஷாப் ஊழியர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசி வாயிலாகவே பண செலுத்தும் விவரங்களைத் தெரிவித்துள்ளார். UPI பேமண்ட் முறையில் கூகுள் பே மூலமாக 420 ரூபாய் செலுத்தக் கேட்டிருக்கிறார் மொபைலில் பேசியவர். ராதிகாவும் ஒப்புக்கொண்டு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.


ஆனால், UPI ஐடி எண்ணைத் தருமாறு அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டதும் ராதிகாவும் பகிர்ந்துள்ளார். அதன் மூலம் பணம் எடுப்பதற்கான கோரிக்கை ராதிகா எண்ணுக்கு வர, அதை உறுதி செய்துள்ளார்.  ஆனால்,  420 ரூபாய்க்கு பதிலாக 29,001 ரூபாய் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதை அறிந்த ராதிகா, உடனடியாக அதே மது கடை எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். மறுமுனையில் பேடிய நபர் தவறுதலாக நடந்துவிட்டதாகவும் பணம் ராதிகாவின் கணக்குக்கு திரும்ப வந்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், அடுத்த நொடியே ராதிகாவின் கணக்கிலிருந்து 58 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. பதறிய ராதிகா உடனடியாக அந்த மது கடைக்கே சென்றுள்ளார். ஆனால், அந்த மொபைல் எண் தங்களுடையது இல்லை என விளக்கிய பின்னர்தான் ஏமாந்திருப்பதை உணர்ந்துள்ளார் ராதிகா.

மொத்தமாக 87 ஆயிரம் ரூபாயை இழந்தவர் தற்போது மோசடி வழக்கை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

Loading...

UPI மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் போது அதிகரிக்கும் மோசடிகளால் பணப் பரிவர்த்தனைகளை ஆன்லைனில் பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வது அவசியம் என்கின்றனர் காவல் துறையினர்.

மேலும் பார்க்க: சென்னையில் 11 ஆண்டுகளாக ஏமாந்த மருத்துவர்!
First published: August 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...