ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த மாப்பிள்ளை... கடைசியில் நேர்ந்த துயரம்

ஒரே மேடையில் இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த மாப்பிள்ளை... கடைசியில் நேர்ந்த துயரம்

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த மாப்பிள்ளை

இரட்டை சகோதரிகளை திருமணம் செய்த மாப்பிள்ளை

இரட்டை சகோதரிகள் ஒரு ஆணை திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Mumbai, India

மஹாராஷ்ட்ராவில் இரட்டைச் சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த நபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மஹாராஷ்ட்ர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள் ரிங்கி மற்றும் பிங்கி. ஐ.டி ஊழியர்களான இவர்கள் சிறுவயது முதலே மிகவும் பாசத்துடன் இருந்துள்ளனர். திருமணம் செய்தால் பிரிந்து செல்ல நேரிடும் எனக் கருதிய சகோதரிகளுக்கு திடீரென ஒரு வித்தியாசமான யோசனை உதித்துள்ளது. வேறு வேறு நபர்களை திருமணம் செய்தால்தானே பிரச்சினை என யோசித்த இருவரும் நாம் ஏன் ஒரே நபரை திருமணம் செய்துகொள்ளக் கூடாது என முடிவெடுத்தனர்.

அதன்படி அவர்களுக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமான அதுல் எனும் நபரை திருமணம் செய்துகொள்ள இருவரும் முடிவெடுத்து கோலாகலமாக நடந்து முடிந்தது திருமணம்.

திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில் இந்த மாதிரியான திருமண நடைமுறை சரியா, இவ்வகை திருமணங்களுக்குச் சட்டத்தில் இடம் இருக்கிறதா என இணையவாசிகள் விவாதிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் சோஷியம் மீடியா விவாதம் தற்போது வழக்குப்பதிவு வரை சென்றுவிட்டது.

இரட்டைச்சகோதரிகளை திருமணம் செய்த புது மாப்பிள்ளை அதுல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இரண்டு பேரைத் திருமணம் செய்த நபர் இரண்டே நாளில் போலீஸில் சிக்கிய சம்பவம் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

First published:

Tags: Maharastra