அம்மாடியோவ்..! இதுதான் 16 பெற்று பெருவாழ்வு வாழ்வதோ...

குழந்தைகளுடன் Patty Hernandez

ஆன்லைனில் மிகவும் அவதூறாகவும், அறுவருப்பாகவும் கமெண்ட் அடிப்பார்கள் என்பது எனக்கு தெரியும், இருப்பினும் இது கடவும் கொடுத்த வரம், கடவும் எனக்கு மேலும் ஒரு குழந்தை கொடுத்தால் நான் தாராளமாக பெற்றெடுப்பேன் எனவும் பேட்டி ஹெர்னாண்டஸ் கூறினார்.

  • Share this:
16ம் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக ஏற்கனவே 15 குழந்தைகளுக்கு தாயான ஒருவர் 16வதாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார். தற்கால வாழ்க்கை முறையில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டும் தான் என்றாகிவிட்ட நிலையில் மிகவும் அரிதாகவே 3 அல்லது அதற்கு மேலான குழந்தைகள் இருக்கும் இல்லத்தை பார்க்க முடியும்.
ஆனால் அமெரிக்காவில் 16வதாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்து ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் தாய் ஒருவர்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தின் சார்லோட் நகரைச் சேர்ந்தவர் 39 வயதாகும் பேட்டி ஹெர்னாண்டஸ் (Patty Hernandez) என்ற பெண்மணி தான் 16 குழந்தையை பெற்றெடுத்த சாதனையாளர். இவருடைய 16 குழந்தைகளுக்குமே ஆங்கில எழுத்தான 'C' என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைத்தான் வைத்திருக்கிறார் பேட்டி ஹெர்னாண்டஸ். இவருடைய கணவர் கார்லோஸின் (வயது 38) பெயரின் முதல் எழுத்து 'C' என்பதால் அவரை மரியாதைப்படுத்தும் விதமாக தனது ஒவ்வொரு குழந்தையின் பெயரின் முதல் எழுத்தும் 'C' என்றே தொடங்கும் வகையில் வைக்கப்பட்டிருப்பதாக பேட்டி ஹெர்னாண்டஸ் தெரிவித்தார்.

16 குழந்தைகள் பெற்றெடுத்தது குறித்து பேட்டி ஹெர்னாண்டஸ் கூறுகையில், “தன்னுடைய 16வது குழந்தைக்கு கிளேட்டன் என பெயரிட்டிருப்பதாக கூறிய பேட்டி, எனது கணவரின் முதல் எழுத்து சி என்பதால் அனைத்து குழந்தைகளுக்குமே அந்த எழுத்தில் தொடங்கும் வகையில் தான் பெயர் சூட்டியுள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் இது போன்று ஒரே எழுத்தில் பெயர் வைப்பதற்கு போதுமான பெயர்கள் நினைவுக்கு வருவதில்லை என நகைச்சுவையாக தெரிவித்த பேட்டி ஹெர்னாண்டஸ் தான் கடைசியாக பார்த்த இந்த பிரவசமே தனக்கு மிக கடினமாக இருந்ததாகவும், இருப்பினும் இதற்கு மேலும் தான் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதுமாகவே தெரிவித்தார்.

சொந்தமாக கிளீனிங் நிறுவனம் வைத்து நடத்திவரும் பேட்டி ஹெர்னாண்டஸ், இத்தனை குழந்தைகளை பெற்றதற்காக சிலர் ஆன்லைனில் மிகவும் அவதூறாகவும், அறுவருப்பாகவும் கமெண்ட் அடிப்பார்கள் என்பது எனக்கு தெரியும், இருப்பினும் இது கடவும் கொடுத்த வரம், கடவும் எனக்கு மேலும் ஒரு குழந்தை கொடுத்தால் நான் தாராளமாக பெற்றெடுப்பேன் எனவும் தனது 16வது குழந்தையை 40வது வாரத்தில் பெற்றெடுத்ததாகவும், இதற்கு முன்னாள் 38 வாரங்களுக்குள்ளாகவே குழந்தை பெற்றிருப்பதாகவும் பேட்டி ஹெர்னாண்டஸ் கூறினார்.
Published by:Arun
First published: