சமீப காலமாக நோய்வாய்ப்பட்ட விலங்குகளுக்கு தீர்வு காண மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ நிபுணர்களை உயிரியல் பூங்காக்கள் நாடி வருகின்றன. குறிப்பாக செயற்கை மற்றும் ஆர்தோடிக்ஸ் துறையில் இது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ ஜூவில் பிறந்து 3 மாதங்களேயான ஒட்டகச்சிவிங்கி குட்டி ஒன்றுக்கு மூட்டில் அசாதாரண கோளாறால் ஏற்பட்ட வளைந்த கால்களை சரி செய்ய, லெக் பிரேஸ்கள் (leg braces) பொருத்தப்பட்டு உள்ளது.
காலில் ஏற்பட்ட அசாதாரண கோளாறால் இயல்பாக நிற்கவும் நடக்கவும் முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த குட்டி ஒட்டகச்சிவிங்கியின் பெயர் Msituni ஆகும். சான் டியாகோ ஜூ சஃபாரி பார்க்கில் உள்ள இந்த ஒட்டகச்சிவிங்கியின் முன் கால்களில், கஸ்டம் ஆர்த்தோடிக் பிரேஸ் (custom orthotic brace) பொருத்தப்பட்டது. இந்த பெண் ஒட்டகச்சிவிங்கிக்கு, மனித மணிக்கட்டில் உள்ள எலும்புகளுக்கு இணையான கார்பியின் ஹைபர் எக்ஸ்டென்ஷனை சரி செய்ய இந்த கஸ்டம் ஆர்த்தோடிக் பிரேஸ் பொருத்தப்பட்டுள்ளது.
இதற்காக சான் டியாகோ ஜூவானது சான் டியாகோ நிறுவனமான ஹேங்கர் கிளினிக்குடன் (Hanger Clinic) இணைந்து செயல்பட்டது. Hanger Clinic-ஆனது டெக்சாஸின் ஆஸ்டினை தலைமையிடமாக கொண்டுள்ளது. பிறவி குறைபாடுகள் அல்லது காயங்கள் உள்ள நோயாளிகளின் உடல் திறன்களை மேம்படுத்த அல்லது மீட்டெடுக்க உதவும் தயாரிப்புகள் (ஆர்த்தோடிக்ஸ் மற்றும் புரோஸ்தெடிக்ஸ்) மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
சான் டியாகோ உயிரியல் பூங்கா சஃபாரி பூங்காவின் மூத்த கால்நடை மருத்துவர் மாட் கின்னி இதுபற்றி கூறுகையில், ஹைப்பர் எக்ஸ்டென்ஷன் சிக்கல் காரணமாக இந்த ஒட்டகச்சிவிங்கி குட்டியின் மூட்டுகளில் ஏற்பட்ட பிரச்னை அதற்கு கடுமையானதாக இருந்தது. இந்த நிலையை உடனடியாக சரி செய்யாவிட்டால் அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று அச்சம் ஏற்பட்டது.
எனவே ஒட்டகச்சிவிங்கி குட்டிக்கு லெக் பிரேஸ் பொறுத்த முடிவு செய்தோம். ஆனால் புதிதாக பிறந்துள்ள இந்த குட்டி ஒவ்வொரு நாளும் உயரமாக வளர்வதால், அது மிகவும் சவாலானது. எனவே நாங்கள் ஹேங்கர் கிளினிக்கில் உள்ள ஆர்தோடிக்ஸ் நிபுணர்களை அணுகினோம் என்றார். தற்போது அந்த குட்டிக்கு பொருத்தப்பட்டு உள்ள இந்த கஸ்டம் பிரேஸ் அலங்கரிக்கப்பட்ட கார்பன் கிராஃபைட்டால் ஆனது.
Also Read : லியா பட்டுக்கே டப் கொடுக்கும் பூனை!
இதை பொருத்திய பிறகு முன்பு ஒரு அடி கூட நடக்க மிகவும் சிரமப்பட்ட Msituni, தற்போது தனது இனத்துடன் கலந்து விளையாடி மகிழும் அளவிற்கு சகஜமாகி விட்டது. இதனிடையே சான் டியாகோ உயிரியல் பூங்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், சரியான நேரத்தில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளாமல் போயிருந்தால் Msituni உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருந்திருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.