ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

கிரிக்கெட் உலகில் தோனியின் 16 ஆண்டுகள்: ட்விட்டரில் டிரெண்டாகும் #16YearsofIconicDhoni ஹேஸ்டேக்

கிரிக்கெட் உலகில் தோனியின் 16 ஆண்டுகள்: ட்விட்டரில் டிரெண்டாகும் #16YearsofIconicDhoni ஹேஸ்டேக்

மகேந்திர சிங் தோனி

மகேந்திர சிங் தோனி

தலைச்சிறந்த தலைமைப் பண்பு, கடினமான சூழல்களில் நிதானமாக முடிவெடுக்கும் திறன், சமயோசித்த சிந்தனை உள்ளிட்ட காரணங்களால் கிரிக்கெட் உலகில் தனக்கென தனிபாதையை தோனி உருவாக்கினார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமாகி 16 ஆண்டுகளானதையொட்டி #16YearsofIconicDhoni என்ற ஹேஸ்டேக்  ட்விட்டர் டிரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது.

இந்திய அணிக்கு 3 வகை உலகக்கோப்பைகளையும் பெற்றுத் தந்த மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனை, ரசிகர்களால் இன்றளவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் ஒரு சர்வதேச போட்டியிலாவது பார்த்துவிட வேண்டும் என்று ஏக்கமுடன் காத்திருக்கும் ரசிகர்கள், தோனி சர்வதேச போட்டியில் அறிமுகமாகி இன்றுடன் 16 ஆண்டுகள் ஆவதை  #16YearsofIconicDhoni என்ற ஹேஸ்டேக் மூலம் டிவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். அதில், தோனி இந்திய அணிக்காக செய்த பங்களிப்புகளை பட்டியலிட்டு வருகின்றனர்.

ராஞ்சியில் பிறந்த மகேந்திரசிங் தோனி, 2004ம் ஆண்டு டிசம்பர் 23, இதேநாளில் சிட்டகாங்கில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் களமிறங்கி சந்தித்த முதல் பந்திலேயே ரன் அவுட் என்ற முறையில் வெளியேறினார். பின்னர், அதே ஆண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிரடியாக விளையாடி சதமடித்து அனைவரது புருவத்தையும் உயரச்செய்தார். 

இலங்கை அணிக்கு எதிராக அவர் குவித்த 183 ரன்கள், விக்கெட் கீப்பர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இன்றளவும் உள்ளது. 2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் 20 ஓவர் உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையையும் வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று சாதனை படைத்தது. உலகளவில் கிரிக்கெட்டின் மூன்று விதமான உயரிய கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையையும் தோனி படைத்துள்ளார். 

Also read... ஹிந்தி பாடகி கர்ப்பமா?- வரிந்துகட்டிக்கொண்டு தேடிய நெட்டிசன்கள் - அவர் யார் தெரியுமா?

தலைச்சிறந்த தலைமைப் பண்பு, கடினமான சூழல்களில் நிதானமாக முடிவெடுக்கும் திறன், சமயோசித்த சிந்தனை உள்ளிட்ட காரணங்களால் கிரிக்கெட் உலகில் தனக்கென தனிபாதையை தோனி உருவாக்கினார். இதனால் அனைவரும் அவரை கேப்டன் கூல் என்று பட்டப்பெயரிட்டு அழைத்தனர். கிரிக்கெட்டில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் DRS முறைக்கு ரசிகர்கள் தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று அழைக்கும் அளவுக்கு, அந்த முறையை கச்சிதமாக பயன்படுத்தினார். 

Also read... Mi 10T Pro இல்லாவிட்டால் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றவருக்கு அடித்தது ஜாக்பாட்

அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் 331 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். அதில் 178 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார். அதுமட்டுமல்லாது, விக்கெட் கீப்பராக அவர் செய்த சாதனைகளும் ஏராளம். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் மற்றும் ரன் அவுட் செய்யும் திறமை படைத்த தோனி, 634 கேட்சுகளையும், 195 ஸ்டம்பிங்களையும் செய்து சாதனை படைத்துள்ளார். தோனிக்கு மிகச்சிறப்பாக வழியனுப்பு விழா நடத்தப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளதால், அந்த நாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: MS Dhoni