தோனியிடம் செல்லமாக விளையாடும் சாக்ஷி... வைரல் புகைப்படம்..!

மகேந்திர சிங் தோனி தனது ராஞ்சி வீட்டில் தோட்ட வேலை செய்யும் புகைப்படத்தை  சில நாட்களுக்கு முன் அவரது மனைவி சாக்ஷி பகிர்ந்திருந்தார்.

தோனியிடம் செல்லமாக விளையாடும் சாக்ஷி... வைரல் புகைப்படம்..!
தோனி - சாக்ஷி
  • Share this:
மகேந்திர சிங் தோனியிடம் குறும்பு செய்யும் புகைப்படத்தை சாக்ஷி தோனி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் பிசியாக இருக்க வேண்டிய கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். ஊரடங்கில் வீட்டில் இருக்கும் அவர்கள் தங்களது அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது ராஞ்சி வீட்டில் தோட்ட வேலை செய்யும் புகைப்படத்தை  சில நாட்களுக்கு முன் அவரது மனைவி சாக்ஷி பகிர்ந்திருந்தார்.


தற்போது தோனி வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவர் கால் விரலை கடிப்பது போன்ற குறும்புத்தனமான புகைப்படத்தை சாக்ஷி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் இந்திய அணியில் இடம்பெற உள்ளார். ஐ.பி.எல் தொடரில் தோனியின் ஆட்டத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் கொரோனாவால் ஐ.பி.எல் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.















First published: April 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading