72 வயதிலும் பளு தூக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்து அசத்தும் மலேசிய பாடிபில்டிர்!

72 வயதிலும் பளு தூக்கி உடலை கட்டுக்கோப்பாக வைத்து அசத்தும் மலேசிய பாடிபில்டிர்!

72 வயதிலும் பளு தூக்கி அசத்தும் மலேசிய பாடிபில்டிர்

உடலை வலுவாக மற்றும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நவீனத்தால் ஏற்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாக சிறு வியாதிகள் முதல் பெருநோய் வரை 20 வயதிற்குள்ளாகவே ஏற்படும் சூழல் உள்ளது. மருத்துவ துறையின் தொடர் பிரச்சாரங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காரணமாக சமீப காலங்களாக நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயல்பாடுகள் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் பெரியவர்களிடையே தற்போது ஜிம் போகும் வழக்கமும் அதிகரித்துள்ளது. உடலை வலுவாக மற்றும் கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எனவே பாடிபில்டிங் மீதான மோகம் அதிகரித்துள்ளது. பாடிபில்டிங்கில் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார் மலேசியாவை சேர்ந்த 72 வயதான ஆரோக்கியசாமி. இவர் பாடிபில்டிங்கில் முன்னாள் சாம்பியன் ஆவார். இவருக்கு மொத்தம் ஏழு குழந்தைகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர்.

வயது தான் 72 ஆகிறதே தவிர இன்னும் இளைஞர்களை போல பெஞ்ச்பிரஸ் மற்றும் தம்புல்ஸ் என பல ஜிம் ஒர்கவுட்களை சுறுசுறுப்பாகவும், அசால்ட்டாகவும் செய்து ஆர்ம்ஸ்கள் புடைக்க நிற்கிறார் பெயருக்கு ஏற்றார் போல இந்த வயதிலும் ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஆரோக்கியசாமி. வயது ஏறி கொண்டே போனாலும் ஒவ்வொரு நாளும் மிகுந்த ஆர்வத்துடன் ஜிம் கருவிகளை பிடித்து உடலை இரும்பு போல வலுவாக்கி கொள்கிறார் இவர். மேலும் சோர்வின்றி எப்போதும் போல வழக்கமாக ஒர்க்அவுட்களை செய்து ஆரோக்கியமாக இருப்பது உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த பாதுகாப்பு என்றும் நம்புகிறர் ஆரோக்கியசாமி.

பள்ளி படிப்பை பாதியில் விட்ட பிறகு பாடிபில்டிங் மீது ஆரோக்கியசாமிக்கு கவனம் திரும்பியது. இதனை அடுத்து தனது உடலை கட்டமைப்பதில் முழுமூச்சாக இறங்கினார். மலேசியா சார்பாக மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் கடந்த 1981-ம் ஆண்டில் பிலிப்பைன்ஸில் நடந்த தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்க பதக்கத்தை தட்டி சென்றார்.

Also read... ஆப்பிள் ஐபோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு காபி டேபிள் - தாய்லந்தில் அதிர்ச்சி சம்பவம்!

ஆரோக்கியசாமியின் ஹீரோ முன்னாள் மிஸ்டர் யுனிவெர்ஸ் மற்றும் திரைப்பட நட்சத்திரமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆவார். ஆரோக்கியசாமி தனது சொந்த ஊரான தெலுக் இன்டானில், பளு தூக்குவதில் ஆர்வமுள்ள பாடி பில்டர்களுக்கு பயிற்சி அளிக்க சொந்தமாக ஜிம் ஒன்றை இன்றும் நடத்தி வருகிறார். அங்கு பொதுமக்களிடம் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பளு தூக்குதல் மற்றும் உடற்பயிற்சிகள் எப்போதும் வயதை குறைத்து காட்டுவதோடு ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்று கூறி உள்ளார். தனது ஹீரோவான அர்னால்டை நேரில் இன்னும் பார்க்க முடியாதது வருத்தமே என்று குறிப்பிட்டார். பொதுவாக பாடிபில்டிங் வயதுடன் தொடர்புபடுத்தபடாவிட்டாலும், இதில் ஈடுபடுவது ஏராளமான நன்மைகளை உடலுக்கு தர கூடியது என்று சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது தொடர்பாக 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், வாரத்திற்கு 2 முறையாவது உடலை வலுவாக்கும் பயிற்சி செய்த 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்ககளின் ஆயுட்காலம் கணிசமாக மேம்பட்டது கண்டறியப்பட்டது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: