• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மாணவர்களுக்கு துணையாக தினமும் பள்ளிக்கு செல்லும் அதிசய கிளி!

மாணவர்களுக்கு துணையாக தினமும் பள்ளிக்கு செல்லும் அதிசய கிளி!

பள்ளிக்கு செல்லும் அதிசய கிளி!

பள்ளிக்கு செல்லும் அதிசய கிளி!

நிபந்தனையற்ற இந்த அன்பினை எவ்வாறு விவரிக்க முடியும் என்றும் ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

  • Share this:
மாணவர்களுக்கு துணையாக கிளி தினமும் பள்ளிக்கு செல்கிறது என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் போது, அவர்களுக்கு பெரும்பாலும் நண்பர்கள் பள்ளி சக மாணவர்கள் அல்லது பிற நபர்களோ இருப்பார்கள். ஆனால் ஒரு கிளியோ பள்ளி மாணவர்களுக்கு துணையாக ஒவ்வொரு நாளும் வருகிறது.

‘இந்தியாவின் இதயம்’ என்று அழைக்கப்படும் மத்திய பிரதேசத்தில் தான் இந்த சம்பவம் நடந்து வருகிறது. குவாலியரில் “சாரதா பால்கிராம்” என்ற வனம் அமைந்துள்ளது. அங்கிருக்கும் கிளி ஒன்றுதான் பள்ளி மாணவர்களிடம் நட்பாக இருந்து வருகிறது. இவ்வனத்திற்கு அருகில் ராமகிருஷ்ணா வித்யா மந்திர் என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தினமும் வரும் மாணவர்களுடன் அந்த கிளியும் நட்பாக இருந்து வருகிறது.

இந்த கிளி நீண்ட காலமாக அந்த மாணவர்களை பார்த்து வருகிறது. மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது அவர்களுடன் வந்துவிட்டு, பின்னர் மலைகளுக்கு மேல் பறந்துகொண்டு இருக்கும். பிறகு விடுதிக்கு செல்லும் போது அவர்களுடன் மீண்டும் இணைந்து கொள்ளும். அவர்களுடன் விளையாடும், அவர்களுடன் சாப்பிடும் சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது.

 



இதுபற்றி பேசிய அப்பள்ளி மாணவர்களில் ஒருவரான விவேக், ‘நாங்கள் தினமும் பள்ளிக்கு செல்லும் வழியிலும், திரும்பும் போதும் எங்களுடன் அந்த கிளியும் சேர்ந்து கொள்ளும். விடுதிக்கு செல்லும்போதும் அங்கிருக்கும் கொக்குவிடம் விளையாடும். பின்னர் அந்த கிளி எங்களது தோள்பட்டையில் ஏறி வரும். நாங்களும் அதனுடன் விளையாடிக் கொண்டே வருவோம்.



இது ரொம்ப காலமாக நடந்து வருகிறது. எங்களுக்கும் அந்த கிளி ஒரு பறவையாக தெரியவில்லை. அதுவும் எங்களில் ஒருவராக இருக்கிறது. நாங்கள் அதனுடன் ஜாலியாக பேசி கொண்டு, விளையாடிக்கொண்டே இருப்போம். அதுவும் எங்களது குழுவில் ஒன்றாக இருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. இந்த பாசத்தை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

இது அவர்களுக்கு புதுவித சந்தோசத்தையும் அளிக்கிறது. அவர்களுடன் நாங்களும் அதனை ஆச்சர்யமாக பார்த்து வருகிறோம். மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் இடையே உள்ள உறவு எப்பொழுதும் ஆச்சர்யமானது தான்’ என்று ராமகிருஷ்ணா வித்யா மந்திர் பள்ளியின் கண்காணிப்பாளர் தீபக் பேடி கூறியுள்ளார்.

 



இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. செய்தி நிறுவனம் ட்விட்டரில் புகைப்படத்துடன் இந்த செய்தியை வெளியிட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று வருகிறது.



நிபந்தனையற்ற இந்த அன்பினை எவ்வாறு விவரிக்க முடியும் என்றும் ட்விட்டரில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இதுவல்லவா அன்பு என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இதயத்தை வென்றுள்ளது என்றும், கியூட்டாக இருப்பதாகவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: