ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

'ஒரு ஐ.பி.எஸ் ஆபீசர் சார், ரொம்ப தொந்தரவு கொடுக்குறாரு' ... பாராளுமன்றத்தில் தமிழக காங்கிரஸ் எம்பி கம்ப்ளைண்ட் - வைரலாகும் வீடியோ

'ஒரு ஐ.பி.எஸ் ஆபீசர் சார், ரொம்ப தொந்தரவு கொடுக்குறாரு' ... பாராளுமன்றத்தில் தமிழக காங்கிரஸ் எம்பி கம்ப்ளைண்ட் - வைரலாகும் வீடியோ

அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி

அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி

Viral Video : பாராளுமன்றத்தில் தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் புகார் அளித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவிற்கும், காங்கிரஸ்க்கும் நிறைய தொந்தரவு செய்கிறார் என மக்களவையில் தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் புகார் கூறிய வீடியோ இணையம் முழுவதும் வைரலாகி உள்ளது. இது குறித்த வீடியோவில் பாராளுமன்றத்தில் தமிழக காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் கூறியுள்ளதாவது,

  தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. எனினும் கடந்த சில வருடங்களாக ஒரு புதிய அரசியல் தலை தூக்குகின்றது. தமிழகத்தில் டெட் பாடி அரசியல் தொடங்கி உள்ளது. குறிப்பா சொல்ல போனால் ஒரு ஐ.பி.எஸ் ஆபீசர் கர்நாடகால இருந்து வந்துருக்காரு. அவரு சமூகத்தை பிரிக்க எண்ணுகிறார். தவறான தகவல்களை பரப்புகிறார்.

  சிறு குழந்தை தற்கொலை செய்து கொண்டது. அதனை சிறுபான்மை சமூகத்தோடு இணைக்கிறார். கிறிஸ்தவன் , முஸ்லீம் என எந்த இறப்பு வந்தாலும் அவர் பிரச்சனை உருவாக்குகிறார். இது பிரிவினையை உருவாக்குகின்றது. நான் உங்கள் மூலமாக கோரிக்கை வைக்கின்றேன். பிரதமர் மோடி அவரது பார்ட்டி மெம்பரிடம் இது போல் நடந்து கொள்ள கூடாது என தெரிவிக்க வேண்டும் என்று ஆங்கிலத்தில் கூறினார்.

  இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாக பரவியது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு எம்.பி ஒருவர் புகார் செய்வதைப் பார்ப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது (Very funny ) என பதிவிட்டுள்ளார்.

  நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மினி நாடாளுமன்ற தேர்தலாக கருதப்படும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Trending, Viral Video