ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள் - பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்த தம்பதி - விலை இவ்வளவா?

உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள் - பாதுகாப்புக்கு ஆட்களை நியமித்த தம்பதி - விலை இவ்வளவா?

உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள்

உலகிலேயே விலையுயர்ந்த மாம்பழங்கள்

ஜலப்பூர் ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த பழம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மத்திய பிரதசேம் மாநிலம் ஜப்லபூரைச் சேர்ந்த விவசாய தம்பதிகள் ராணி மற்றும் சங்கல்ப் பரிஹர் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன் தங்களது தோட்டத்தில் இரண்டு மாமரக் கன்றுகளை நட்டுள்ளனர்.

அது சாதாரண மாமரங்களைப் போன்று வளரும் என்று எண்ணியிருக்கின்றனர். ஆனால் அந்த மரத்தின் பழங்கள் ரூபி நிறத்தில் அதாவது மாணிக்க நிறமான ஒரு வகையான சிகப்பு நிறத்தில் காணப்பட்டுள்ளது. முதலில் அதிர்ச்சியான அவர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக மாறியிருக்கிறது. அந்த பழம் பற்றிய உண்மை அவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த மாமரம் ஜப்பானை சேர்ந்த மியஷகி (Miyazaki) என்ற வகையைச் சேர்ந்ததாம். இந்த வகை மாம்பழம் உலகிலேயே மிக விலையுயர்ந்தது. சர்வதேச சந்தையில் கடந்த வருடம் இந்த வகை மாம்பழமானது கிலோவுக்கு ரூ.2.70 லட்சம் விலை போனதாம். இந்த வகை மாம்பழங்கள் இந்தியாவில் அரிதாகவே வளர்க்கப்படுகிறது.

ALSO READ | காரை ஸ்டார்ட் செய்த உடன் விசித்திரமான சத்தம்... என்ஜினை திறந்து பார்த பெண் அதிர்ச்சி

இதுகுறித்து சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு இந்த மாம்பழம் குறித்து தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த வருடம் இவர்களது தோட்டத்துக்குள் புகுந்த சில திருடர்கள் மாம்பழங்களை திருடிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்து கண்காணித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பரிஹர் சில மரக்கன்றுகளை வாங்க சென்னைக்கு சென்று, பின்னர் ரயிலில் திரும்பியிருக்கிறார். அப்போது ரயிலில் ஒருவர் மனிதர் அவருக்கு மாமரக்கன்றுகளை பரிசளித்திருக்கிறார். அந்த மாமரக்கன்றுகளை குழந்தைகளைப் போல் பராமரியுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் அவர்கள் அந்த மாமரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளார்கள்.

ALSO READ | மதன் பாத்ரூமில் வழுக்கி விழுவாரா? கொண்டாடும் விஜய் ரசிகர்கள் - ட்விட்டரில் களைகட்டும் ஹேஷ்டேக்குகள்

ஆனால் அவர்களுக்கு அவை எந்த வகையான மாமரங்கள் என்று தெரியாமல் இருந்திருக்கிறது. கடந்த வருடம் இந்த மாமரங்களில் பழங்கள் உருவாகத் துவங்கியுள்ளது. ஆனால் இந்த பழங்கள் மிக வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. பரிஹர் அந்த பழங்களுக்கு தன்னுடைய அம்மாவின் பெயரான டாமினி என்று அழைத்து வந்துள்ளார். பின்னர் இது குறித்து விசாரித்ததில் அது மியஷகி (Miyazaki) வகையைச் சேர்ந்தது என்று தெரிந்துள்ளது. இருப்பினும் அவர்கள் அந்த பழங்களை டாமினி என்றே அழைக்கின்றனராம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த மாம்பழங்கள் குறித்து கேள்விப்பட்டு பலரும் ஒரு பழத்துக்கு ரூ.21,000 வரை வழங்க முன் வந்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த ஒரு நகைக்கடை உரிமையாளர் அவர்கள் என்ன விலை சொல்கிறார்களோ அந்த விலையைக் கொடுத்து வாங்க தயாராக இருந்தாராம். ஆனால் அவர்கள் அதனை யாருக்கும் விற்க தயாராக இல்லை. அதனை வைத்து மேலும் சில மரங்களை வளர்க்க திட்டமிட்டுள்ளனர்.

ALSO READ | "நான் அவன் இல்லை...சிக்கலில் சிக்கிய மதன் கௌரி...சிக்குவாரா பாக்கியா கணவர்" - யூடியூபில் ட்ரெண்டாகிய வீடியோக்கள்

இந்த மாம்பழங்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால் அதன் விலை மிக அதிகம் என்றும் இந்த பழங்களின் சுவை மிக இனிப்பாக இருக்கும் என்றும் மத்தியபிரதேச மாநில தோட்டக்கலை இயக்குநர் ஆர்எஸ் கட்டாரா தெரிவித்தார். மேலும் இந்த மாம்பழங்களை சிலர் பரிசாக வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நூர்ஜகான் என்ற ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மாம்பழங்களுக்கு பிறகு ஜப்பானை சேர்ந்த மியஷகி என்ற மாம்பழங்கள் அதன் விலைக்காக மிகவும் பிரபலமாகியுள்ளது. தற்போது இந்த மாம்பழங்களை விஞ்ஞானிகள் இது எந்த வகையான மாம்பழம், இது கலப்பின வகையைச் சேர்ந்ததா? என்று ஆராய்ச்சி செய்கின்றனர்.

ALSO READ | ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த மனைவியின் நினைவாக 450 மரங்களை நட்ட கணவர்!

அவர்கள் முடிவைத் தெரிவித்த பிறகே மக்கள் இதனை வளர்க்க முடியுமாம். ஜலப்பூர் ஜவஹர்லால் நேரு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த பழம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Mango, Trending