Home /News /trend /

மூளைக்கு சவால் : ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி பெரிய 3 இலக்க நம்பரை உருவாக்க முடியுமா?

மூளைக்கு சவால் : ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி பெரிய 3 இலக்க நம்பரை உருவாக்க முடியுமா?

மூளைக்கு சவால் : ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி பெரிய 3 இலக்க நம்பரை உருவாக்க முடியுமா?

மூளைக்கு சவால் : ஒரே ஒரு தீக்குச்சியை நகர்த்தி பெரிய 3 இலக்க நம்பரை உருவாக்க முடியுமா?

சமீப வாரங்களாக சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களும், பிரெயின் டீஸர் சவால்களும் மாறி மாறி வைரலாகி வருகின்றன.

    சமீப வாரங்களாக சோஷியல் மீடியாக்களில் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களும், பிரெயின் டீஸர் சவால்களும் மாறி மாறி வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன்கள் பெரும்பாலும் நம் கண்களுக்கும், மூளைக்கும் ஓ நேரத்தில் அதிக வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன.

    அதே நேரம் பிரெயின் டீஸர்கள் மூளைக்கு அதிகம் வேலை கொடுக்க கூடியவையாக இருக்கின்றன. பிரெயின் டீஸர் சவால்களை தீர்ப்பது மூளையின் ஆற்றலை அதிகரிக்கிறது,. மேலும் நம்முடைய நினைவாற்றலை வலுவாக வைத்திருக்கிறது. தவிர சவாலில் இறங்கும் நபரை மிகவும் சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக பிரெயின் டீஸர் என்பது ஒரு வகையான புதிர் அல்லது மூளை விளையாட்டு, பெரும்பாலும் இது மறைமுக மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையால் பிரச்சனைகளை தீர்க்கும் திறனை மேம்படுத்தும் வகையில் இருக்கிறது.

    இப்போது நாம் பார்க்க போகும் பிரெயின் டீஸர் பகுப்பாய்வு புதிர்கள் (analytical puzzles) மற்றும் கேம்களில் இருக்கும் சவால்களை தீர்ப்பதில் மகிழ்பவர்களுக்கானது. பிரெயின் டீஸர்கள் முக்கியமாக புதிர்களின் தந்திரமான வெர்ஷனாகும். ஏனெனில் முன்னரே குறிப்பிட்டது போல இவற்றை ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பயன்படுத்தி தான் தீர்க்க முடியும்.

    பிரெயின் டீஸர்களை தீர்க்கும் போது நீங்கள் வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். இவற்றை தீர்க்க வழக்கமாக நீங்கள் சிந்திக்கும் முறைகள் கைகொடுக்காது என்பதால் நீங்கள் ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தனையை பயன்படுத்த வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் சாத்தியமான மிகப்பெரிய நம்பரை கொண்டு வர ஒரே ஒரு தீக்குச்சியை மட்டுமே நகர்த்தி வைக்க வேண்டும் என்ற ஒரு ஒரு சுவாரஸ்யமான பிரெயின் டீஸரை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.

    ஆம், உங்களுக்கான இன்றைய பிரெயின் டீஸர் தீக்குச்சிகள் அடங்கிய ஒன்று தான். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். மொத்தம் 18 தீக்குச்சிகளை சேர்த்து 508 என்ற மூன்று இலக்க எண் உருவாக்கப்பட்டு உள்ளதா.! இதில் ஏதேனும் ஒரு தீக்குச்சியை மட்டுமே நகர்த்தி சாத்தியமான மிகப்பெரிய 3 டிஜிட் நம்பரை கொண்டு வர வேண்டும் என்பதே உங்களுக்கான பிரெயின் டீஸர். அதுவும் வெறும் பத்தே வினாடிகள் தான் டைம்.



    இந்த சவாலை நீங்கள் 10 வினாடிகளில் தீர்க்க படத்தில் உள்ள தீக்குச்சிகளின் எண்ணிக்கை மற்றும் நிலையை நீங்கள் கவனமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும். எப்படி யோசித்தும் இதை விட பெரிய நம்பரை எப்படி ஒரே ஒரு தீக்குச்சியை மட்டுமே உருவாகட்டுவது என்று குழம்பி போயுள்ளீர்களா.!! இப்போது இந்த பிரெயின் டீஸருக்கான பதிலை கீழே பாருங்கள்...

    பதில்:

    இதில் சாத்தியமான அதிகபட்ச மூன்று இலக்க டிஜிட் என்றால் 9-ல் தானே தொடங்கும். எனவே மூன்று டிஜிட்களை துவக்கத்தில் உள்ள 5-ஐ, 9-ஆக மாற்றுவதன் மூலம் உருவாக்கலாம். 900 அல்லது 906 அல்லது 909 எதை உருவாக்குவது.! இதற்கு பதில் 909 தான், ஆம் 1 தீக்குச்சியை மட்டும் நகர்த்துவதன் மூலம் பெறப்படும் மிகப்பெரிய எண் 909.இப்போது கீழே பாருங்கள்..



    இந்த புதிர் தந்திரமானது தான் ஆனால் எளிமையானது. இதை தீர்க்க மூளை சக்தி அதிகம் தேவை. ஆனால் சில வினாடிகளில் நீங்கள் பதிலைக் கண்டுபிடிக்கும் போது உங்கள் மீதான தன்னம்பிகை நிச்சயம் அதிகரிக்கும்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி