ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தனது குழந்தைக்காக சைக்கிளில் புதுமை செய்த தாய் - நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கும் வைரல் வீடியோ!

தனது குழந்தைக்காக சைக்கிளில் புதுமை செய்த தாய் - நெட்டிசன்களின் கவனத்தை ஈர்க்கும் வைரல் வீடியோ!

வைரலாகும் ட்வீட்

வைரலாகும் ட்வீட்

Viral Video 1.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஹர்ஷ் கோயங்கா, ஒரு தாய் தன் குழந்தைக்காக என்ன செய்ய மாட்டார்.? என்ற கேப்ஷனுடன் ஒரு வீடியோவை சமீபத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எல்லா கண்டுபிடிப்புகளுக்கும் "தேவை" தான் தாய் என்று சொல்வதுண்டு. ஒரு தாய் தன் குழந்தையின் பாதுகாப்பு என்று வரும் போது எந்த எல்லைக்கும் செல்வார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

அதே போல ஒரு தாய் தன் பாசமிகு குழந்தையின் சௌகரியத்திற்காக கண்டுபிடிக்கும் ஒரு படைப்பு மிகவும் அழகானதாக இருக்கும். இதற்கு உதாரணம் சமீபத்தில் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா சோஷியல் மீடியாவில் ஷேர் செய்துள்ள வீடியோ தான். 1.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஹர்ஷ் கோயங்கா, ஒரு தாய் தன் குழந்தைக்காக என்ன செய்ய மாட்டார்.? என்ற கேப்ஷனுடன் ஒரு வீடியோவை சமீபத்தில் ஷேர் செய்து இருக்கிறார்.

ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் ஷேர் செய்துள்ள குறிப்பிட்ட வீடியோ ஒரு பெண் தனது குழந்தையுடன் சாலையில் சைக்கிள் ஓட்டுவதை காட்டுகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? அந்த தாய் தனது சிறு குழந்தையை சைக்கிளின் பின்னால் உட்கார வைத்து சாலையில் சைக்கிளை ஓட்டி செல்கிறார். ஆனால் சிறு குழந்தை என்பதால் சைக்கிளின் பின் கேரியரில் அப்படியே உட்கார வைக்க முடியாது. அப்படி உட்கார வைத்தால் அந்த குழந்தைக்கு ஆபத்து.

Read More : நாய்க்குச் செரிமான பிரச்சனை! உரிமையாளர் தயாரித்த நாற்காலி.. வைரல் வீடியோ

எனவே பெண் தனது குழந்தைக்கு சைக்கிளில் பின் இருக்கையாக ஒரு சிறிய இளஞ்சிவப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலியை பொருத்தி கொண்டு அதில் குழந்தையை உட்கார வைத்து அந்த தாய் சைக்கிள் ஓட்டுவதை ஹர்ஷ் கோயங்கா ஷேர் செய்துள்ள வைரல் வீடியோ காட்டுகிறது. ஒரு தாய் தனது குழந்தைக்காக சைக்கிளின் பின்னால் ஒரு தற்காலிக இருக்கையை உருவாக்கி இருப்பது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது. வீடியோ கீழே:

குழந்தை மற்றும் தாய் இருவரும் வசதியாக அமர்ந்து சாலையில் சைக்கிள் சவாரி செய்வதை இந்த 9 வினாடிகள் அடங்கிய வீடியோ காட்டுகிறது. கடந்த செப்டம்பர் 26-ம் தேதியன்று ஷேர் செய்யப்பட்ட வீடியோ சுமார் 1.4 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களை பெற்றுள்ளது மற்றும் பல கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளது. தனது குழந்தைக்காக வித்தியாசமான படைப்பாற்றலை வெளிப்படுத்திய தாய் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி உள்ளார். ஒரு யூஸர் "ஒரு குழந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்க அதன் அம்மாவின் பாராட்டத்தக்க புதுமையான முயற்சி" என்று கூறியுள்ளார். மற்றொரு யூஸர் "பார்க்க என்ன ஒரு அழகான காட்சி!! தன் குட்டி இளவரசருக்காக இந்த தாய் ஒரு சிம்மாசனம் படைத்திருக்கிறார்!" என்று பாராட்டி உள்ளார்.

இதனிடையே இந்த வைரல் வீடியோவை பார்த்த ஒரு யூஸர், இந்த தாய் தனது குழந்தையுடன் அதற்கு தேவையான புதிய நாற்காலியை வாங்க சென்றிருக்கலாம். அதனை வாங்கிய பின் வீட்டிற்கு எடுத்துச் செல்ல இதுவே சிறந்த யோசனை என்று நினைத்து சைக்கிளின் பின்னால் வைத்து, அதில் தனது குழந்தையையும் அமர வைத்து ஒட்டி சென்றிருக்கலாம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending News, Trending Video, Viral