மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ

வரவேற்பு தேநீர் தொடங்கி உணவிற்குப் பின், மென்று சாப்பிட பீடா வரை சமைத்துள்ளார்.

மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார் - வைரல் வீடியோ
மருமகனை வரவேற்க 67 வகையான உணவுகளை சமைத்து அசத்திய மாமியார்..!
  • Share this:
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் நம் அன்பை உணவின் வழியாகக் காட்டுவதுதான் இந்தியர்களின் கலாச்சாரம். அவர்கள் வயிறு முட்டும் அளவிற்கு உணவுகளை சமைத்து பரிமாறுவோம்.

இன்னும் நெருக்கமான உறவு என்றால் கவனிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும். அப்படி ஆந்திராவில் மாமியார் தன் மருமகனை உபசரிக்க 67 வகையான உணவுகளை சமைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஆந்திராவை சேர்ந்த இவர் தன் மருமகனை முதல் முறையாக வீட்டிற்கு மதிய உணவிற்கு அழைத்துள்ளார். அவரை அருசுவை உணவுகளுடன் வரவேற்க எண்ணி 67 வகையான உணவுகளை சமைத்துள்ளார். அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
அதில் அவர் வரவேற்பு தேநீர் தொடங்கி உணவிற்குப் பின் மென்று சாப்பிட பீடா வரை சமைத்துள்ளார். அந்த உணவுகள் அத்தனையும் ஊட்டச்சத்து மிக்கதாக சமைத்து அசத்தியுள்ளார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading