குடும்ப பிரச்னையில் மாமியாரை மடக்கிப் பிடித்து கடித்த மருமகள் - தலையில் 6 தையல்

குடும்ப பிரச்னையில் மாமியாரை மடக்கிப் பிடித்து கடித்த மருமகள் - தலையில் 6 தையல்
தலையில் காயத்துடன் நாகேஸ்வரி
  • Share this:
குடும்ப பிரச்னை காரணமாக மருமகள் மாமியாரை கடித்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டு ஆறு தையல் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மின் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகேஸ்வரி 62 பத்திர எழுத்தர். இவரது மகன் சரவணகுமார் 38. சரவணகுமார் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார் .

இந்நிலையில் சரவணகுமார் குடிப்பழக்கத்தில் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது .இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி தொடர்ந்து கண்டித்ததால் சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு வந்துவிடுவார் . இதனால் கல்பனா நாகேஸ்வரியுடன் வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார் .


இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதில் மாமியாரை மருமகள் கல்பனா தாக்கியுள்ளார். இதுகுறித்து நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று நாகேஸ்வரி மின் நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன் மாமியாரைத் தாக்கி அவரது தலைப் பகுதியில் பயங்கரமாக கடித்துள்ளார் . இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் ஆறு தையல் போட்டுள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருமகள் கல்பனாவை கைது செய்துள்ளனர்
First published: December 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading