ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியார்!!

வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியார்!!

மருமகனுக்கு தடபுடல் விருந்து வைத்த மாமியர்

மருமகனுக்கு தடபுடல் விருந்து வைத்த மாமியர்

சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார் மாப்பிள்ளை சைதன்யா. இதில் பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியவில்லையாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Andhra Pradesh, India

  வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியாரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

  ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம் எஸ்.கோட்டா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா -சுப்புலட்சுமி தம்பதியினரின் மகன் சைதன்யா, இவருக்கும் விசாகப்பட்டினம் ஸ்ரீநிவாச ராவ் தனலட்சுமி மகள் நிஹாரிகாவுக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

  விருந்து புகைப்படம்

  இவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 9-ல் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தசரா பண்டிகைக்கு வருமாறு வருங்கால மாப்பிள்ளையை பெண் வீட்டார் அழைத்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து, பெண் வீட்டுக்கு வந்தார் மாப்பிள்ளை சைதன்யா.அப்போது, அவருக்கு 125 வகை பலகாரங்கள், உணவு வகைகளை பரிமாறி அசத்தினார் மாமியார்.

  Also Read:  இருக்கையில் அமராமல் நடனம் ஆடிக்கொண்டே பேருந்தை ஓட்டும் ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

  அவற்றை சாப்பிட முடியாமல் பாதியிலேயே எழுந்து விட்டார் மாப்பிள்ளை சைதன்யா. இதில் பல உணவு வகைகளின் பெயர் கூட அவருக்குத் தெரியாதாம். ஆனால், ருசியாக உள்ளது என வருங்கால மாமியாரின் கைப்பக்குவத்தை வெகுவாக பாராட்டியுள்ளார் சைதன்யா.வருங்கால மருமகனுக்கு 125 வகை உணவு சமைத்துக் கொடுத்து அசத்திய மாமியாரின் வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Andhra Pradesh, Viral Video