சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் இரவு முழுவதும் சுருட்டு பிடித்த தனக்கு அதற்குப் பிறகு சுருட்டு பிடிக்கும் எண்ணமே வரவில்லை என்று தந்தை ரஜினி கூறுவார். அதாவது நாம் தீராத பற்றுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை தொடர்ந்து இடைவிடாமல் செய்யும் போது அதன் மீது சலிப்பு ஏற்பட்டு அந்த பற்றிலிருந்து விலகி விடுவோம் என்பதுதான் இந்த காட்சியின் மையக் கருத்து ஆகும்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த திரைப்பட காட்சி, மத்திய சீனாவில் உள்ள யூனான் மாகாணத்தில் இருக்கும் ஒரு பெற்றோருக்கும் தெரிந்து விட்டதோ என்னவோ! அதே பாணியில் அவர்களுடைய குழந்தையை கண்டித்துள்ளனர். இங்குள்ள ஒரு தம்பதியர் ஒரு நாள் மாலை பொழுதில், அவர்களுடைய 8 வயது மகனிடம் வீட்டு பாடங்களை செய்து முடித்துவிட்டு, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விடுமாறு அறிவுறுத்தி, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். இரவு நீண்ட நேரம் கழித்து அவர்கள் வீடு திரும்பிய போது மகன் தூங்காமல் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு கோபமடைந்தனர்.
மேற்கொண்டு விசாரித்ததில், சிறுவன் குளிக்கவில்லை, வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதுடன் தொடர்ந்து டிவி மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிய வந்தது. இதனால் மிகுந்த கோபம் கொண்ட அந்த பெற்றோர் மகனுக்கு நூதன தண்டனை கொடுத்தனர். அதாவது காலை 5 மணி வரையில் இரவு முழுக்க தொடர்ந்து டிவி பார்க்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். சிறுவன் இடைப்பட்ட நேரத்தில் தூங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்ய அவர்களும் கண்விழித்து கண்காணித்தனர். இரவு முழுவதும் டிவி பார்த்ததில் சிறுவனுக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டதா என்னவோ தற்போது அவனது நடவடிக்கைகளில் நல்ல மாற்றம் தென்படுகிறதாம்.
Read More : உலகின் காஸ்டலி காய்கறி இது தான்... ஒரு கிலோவின் விலையை கேட்டால் ஆடி போவீங்க
வேதனையாக மாறிய குதூகலம்
அந்த வீடியோவில் நமக்கு பிடித்ததை போல டிவி தானே பார்க்க சொல்கிறார்கள் என்று மகிழ்ச்சி அடைந்த சிறுவன், தொடக்கத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டுக்கொண்டு வழக்கம் போல் குஷியாக டிவி பார்த்துக் கொண்டிருக்கிறான். சற்று நேரத்தில் களைப்பு தென்பட மெத்தையில் சென்று உறங்க முயற்சித்த சிறுவனை, அவனது பெற்றோர் வலுக்கட்டாயமாக மீண்டும் இழுத்து வந்து டிவி பார்க்க வைக்கின்றனர். அவன் கதறி அழுதும் கூட அந்த நூதன தண்டனையை அவர்கள் நிறுத்தவில்லை
இந்த தண்டனை கடுமையாக இருந்தாலும், சிறுவனின் நடவடிக்கைகளில் இப்போது எல்லாம் நல்ல மாற்றம் தென்படுகிறது. நம்ம ஊர்களிலும் கூட சிறுவர்கள் விடாமல் செல்போனில் கேம் விளையாடுகின்றனர் அல்லது வேறு விதமாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பெற்றோரிடம் பரவலாக இருக்கிறது. அப்படி குற்றம்சாட்டும் பெற்றோரின் கண்ணில் இந்த செய்தி படாமல் இருப்பது நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending News, Trending Video