ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

வீடியோ: குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்.. அதிகாரிகளை ஆசீர்வதித்த காட்டு யானை..

வீடியோ: குட்டி யானையை தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறையினர்.. அதிகாரிகளை ஆசீர்வதித்த காட்டு யானை..

குட்டி யானையும் தாய் யானையும்

குட்டி யானையும் தாய் யானையும்

அந்த குட்டி யானையின் தாய், வனத்துறை அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வதுபோல் தனது தும்பிக்கையை உயர்த்திக் காட்டுகிறது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  யானைகள் வழக்கமாக அடர்ந்த வனப்பகுதிகளில் கூட்டம் கூட்டமாக வாழும் மிருகங்கள். சில நேரங்களில் யானை குட்டிகள், தவறுதலாக திசை மாறி தொலைந்துப் போகக்கூடும். அதனை வனத்துறையினர் பாதுகாப்பாக கூட்டத்துடன் சேர்த்து வைப்பார்கள்.

  அவ்வாறாக ஒரு வழி தவறிய யானை குட்டி ஒன்றை வனத்துறையினர் அதன் கூட்டத்துடன் சேர்த்து வைத்துள்ளனர். அப்போது அந்த குட்டி யானையின் தாய், வனத்துறை அதிகாரிகளை பார்த்து வாழ்த்து சொல்வதுபோல் தனது தும்பிக்கையை உயர்த்திக் காட்டுகிறது. இதனை இந்திய வனத் துறை அதிகாரி (ஐ.எஃப்.எஸ்) ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தமிழக வனத்துறைக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

  இதையும் வாசிக்க: உபியில் ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10 ஆம் வகுப்பு மாணவர் - அதிர்ச்சி வீடியோ

  மேலும் “குட்டி யானையை தாய் யானையுடன் வனத்துறை அதிகாரிகள் சேர்த்து வைத்தனர். அந்த தாய் யானை காட்டுக்குள் செல்வதற்கு முன் வனத்துறை அதிகாரிகளை வாழ்த்தி செல்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

  இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Elephant, Elephant and calf, Trending Video