குழந்தையை உற்சாகமூட்ட பிரேக் டான்ஸ் ஆடும் பெண்.. வைரலாகும் வீடியோ..

நடனம் முறையாக இல்லை என்றாலும் அவரின் தன்னம்பிக்கை நிறைந்த இடைவிடாத நடனம்தான் அனைவரையும் மகிழ்விக்கிறது.

Web Desk | news18
Updated: September 14, 2019, 8:38 AM IST
குழந்தையை உற்சாகமூட்ட பிரேக் டான்ஸ் ஆடும் பெண்.. வைரலாகும் வீடியோ..
நடனமாடும் தாய்
Web Desk | news18
Updated: September 14, 2019, 8:38 AM IST
சிரிப்பிற்கு இலக்கணம் இல்லை என்பார்கள். அது எந்த வடிவிலும் இருக்கலாம். அதேசமயம் எத்தனை மனக்கவலைகளையும் பொசுக்கும் வல்லமை சிரிப்பிற்கே சாத்தியம். அந்த வகையில் இந்த பெண் குழந்தையை உற்சாகப்படுத்த ஆடும் நடனம் குழந்தையை மட்டுமல்ல காணும் அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.

இந்த வீடியோவில் இந்தி பாடல் ஒலிக்கிறது. அதற்கு குழந்தை ஒன்று நடனமாடுகிறார். பின் குழந்தை பாதியிலேயே ஆட்டத்தை நிறுத்திவிட்டு ஓடிவிடுகிறது. பின் தொடர்ந்து ஒலிக்கும் பாடலுக்கு அங்கிருந்த எழுந்து நடனமாடுகிறார். அந்த நடனம் முறையாக இல்லை என்றாலும் அவரின் தன்னம்பிக்கை நிறைந்த இடைவிடாத நடனம்தான் அனைவரையும் மகிழ்விக்கிறது.

இதைக் காணும் நமக்கே உற்சாகம் தோன்றுகிறபோது குழந்தைக்கு இருக்காதா.. பின் அந்த பெண் தொடர் நடனத்தையும், ஊக்குவிப்பையும் பார்த்த குழந்தை மீண்டும் வந்து ஆடத் தொடங்குகிறது.


இந்த வீடியோவை நீங்களும் காண கீழே பார்க்கவும்.35 நொடிகள் ஓடும் இந்த வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகப் பரவி வருகிறது.

Loading...

 

Watch Also:

 
First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...