மகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்த அம்மா - ட்விட்டரில் ட்ரெண்டாகும் புகைப்படம்!

மகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்த அம்மா - ட்விட்டரில் ட்ரெண்டாகும் புகைப்படம்!

டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி ஒரு அழகான சடை பூ

தாய்மார்கள் தங்கள் குழந்தையின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தாய்மார்கள் தங்கள் குழந்தையின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள். சமீபத்தில் ஒரு இந்திய தாய் தனது மகளுக்கு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி ஒரு அழகான சடை பூவை உருவாக்கியுள்ளார். ஆனால் அந்த பூவானது நம்பமுடியாத அளவுக்கு இது உண்மையான பூக்கள் போன்றே தோற்றமளிக்கிறது.

இதனை சுரேகா என்ற யூசர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் டிஷ்யூ பேப்பரால் உருவாக்கிய பூக்கள் என குறிப்பிட்டிருந்தார். என் வயதான அம்மா மணிக்கணக்கில் உட்கார்ந்து எனக்காக இந்த பூக்களை உருவாக்கியுள்ளார். இதற்காக அவர் மூட்டு வலியை அனுபவித்தார். இருப்பினும், அவர் எனக்காக உருவாக்கிய மலர்கள் உண்மையான மல்லிகை பூக்கள் போல தோற்றமளிக்கிறது என கூறியுள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ட்விட்டர் யூசர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். ‘அது எவ்வளவு அழகாக இருக்கிறது’ என்பதை காண்பிப்பதற்காக சுரேகா அந்த பேப்பர் மலர்கள் சூடிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அம்மா தயாரித்த டிஷ்யூ பேப்பர் மலர்கள் இதுவரை தலைமுடி வைத்த மற்ற எல்லா பூக்களையும் விட அழகாக இருக்கிறது என்று சுரேகா கூறினார்.

படங்களில் உண்மையான பூக்கள் என்றே பலர் நினைத்துள்ளனர். டிஸ்யூ பேப்பரில் இருந்து தயாரிக்கப்பட்ட பூக்கள் என்று சுரேகா குறிப்பிடவில்லை என்றால், அவை உண்மையான பூக்கள் அல்ல என்று யூகிக்க முடியாது என்று தீபா சர்மா என்ற யூசர் கமெண்ட் செய்துள்ளார்.

மற்றொருவர் சுரேகா தாயின் படைப்பாற்றலுக்கான பாராட்டுகளை தெரிவித்து, அவரது தாயை ஒரு அற்புதமான கலைஞர் என்று அழைத்தார்.

Also read... கர்நாடகாவில் மஞ்சள் தர்பூசணி பழத்தை விளைவித்த இளம் விவசாயி!

மற்றொரு வர்ணனையாளரான தஸ்னிம், இந்த செயற்கை பூக்கள் பற்றிய ஒரு கதையை பகிர்ந்து கொண்டார். ‘80-களின் முற்பகுதியில், அவளுடைய நண்பர் ஒருவர் செயற்கை பூக்களை வாங்கி மல்லிகை வாசனை திரவியம் தெளித்து கொடுத்ததற்காக அவர் கூறினார். அதேபோல தற்போது உங்கள் அம்மாவும் அழகாக பூக்களை தயாரித்துள்ளார், இது எனது பழைய காலத்தை நினைவுகூற வைக்கிறது என்றார்.

இதேபோல எண்ணற்றோர் சுரேகாவின் ட்வீட்டிற்கு கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். சுரேகாவின் அருமையான இந்த இடுகை இதுவரை 1,600க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.சுரேகா ஷேர் செய்த இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாக பரவி நெட்டிசன்களின் இதயத்தை வென்றது. அந்த அன்பு அம்மாவுக்கு அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தங்களது அம்மா தங்களுக்காக செய்த இதுபோல வித்யாசமான சில விஷயங்கள் குறித்தும் ட்விட்டரில் ஷேர் செய்து வருகின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: