• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • குழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்! டிக்-டாக்கில் குவியும் பாராட்டு

குழந்தையை சாப்பிடவைக்க விதவிதமாக ஏமாற்றும் தாய்! டிக்-டாக்கில் குவியும் பாராட்டு

  • Share this:
குழந்தைகளை வளர்ப்பதில் தாய்மார்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது சரியாக சாப்பிடாமல் இருப்பது தான். ஆனால் டிக்-டாக்கில் பெண் ஒருவர் அவரது மகனை விதவிதமாக ஏமாற்றி சாப்பாடு ஊட்டும் வீடியோ அதிகமானவர்களை கவர்ந்துள்ளது.

குழந்தைகள் பொதுவாக சாப்பிடுவதற்கு மிகவும் அடம்பிடிப்பார்கள். அதற்காக நிலாவை காண்பித்தும், பூச்சாண்டி வரான் என்று ஏமாற்றி சாப்பாடு ஊட்டும் காலம் எல்லாம் தற்போது மலையேறி விட்டது. அதற்கெல்லாம் சற்றும் அசராதவர்களாக உள்ளனர். தற்போது இருக்கும் குழந்தைகள்.

காலத்திற்கேற்ப அவர்களையும் ஏமாற்றும் சில வழிமுறைகளை இந்த பெண் செய்து காண்பித்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். சாக்லெட் , குளிர்பானங்களில் சாப்பாடு மறைத்து வைத்து கொடுப்பது என விதவிதமாக ஏமாற்றி அந்த குழந்தையை சாப்பிட வைக்கிறார் அந்த பெண்.













குழந்தைகளை ஏமாற்றினாலும் அவர்கள் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருப்பதால் இந்த ஃபார்மூலாவை பலரும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர். பல பெண்களும் அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பலரது மனதையும் கவர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு செல்போன் மற்றும் கார்ட்டூன் வீடியோக்களை காண்பித்து தவறான வழிக்கு செல்வதை விட இது சிறந்த வழியாக உள்ளது என்று பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Also Watch : கர்ப்பிணிப் பெண்களுக்கு பற்களில் மஞ்சள் கறையா? உடனே டாக்டரை பாருங்க

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: