Home /News /trend /

நீதிபதி, போலீசாரை பாடாய்படுத்திய குறும்புக்கார குரங்கு - வைரல் வீடியோ

நீதிபதி, போலீசாரை பாடாய்படுத்திய குறும்புக்கார குரங்கு - வைரல் வீடியோ

வைரலாகும் குரங்கு வீடியோ!

வைரலாகும் குரங்கு வீடியோ!

Viral Video | மதுரா மாவட்டத்தில் உள்ள விருந்தாவனத்தில் குறும்புக்கார குரங்கு ஒன்று மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்ணாடியை தூக்கி செல்லும் வீடியோ அங்கிருந்த கேமராவில் சிக்கியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Uttar Pradesh, India
    இந்தியாவின் பல பகுதிகளில் சர்வசாதாரணமாக நடமாடும் குரங்குகளால் மனிதர்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அச்சுறுத்தல்கள் மிகவும் பொதுவான ஒன்றாக மாறி விட்டது. பெரும்பாலான சுற்றுலா தலங்களில் குரங்குகள் சுற்றித் திரிவதை சகஜமாக பார்க்கிறோம். குரங்குகள் மக்களிடமிருந்து பொருட்களை பறித்து செல்வது, சில நேரங்களில் உணவுகளை தேடி வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது என பல அட்டகாசங்களில் ஈடுபடுகின்றன.

    குரங்குகள் மனிதர்களிடம் இருந்து விலையுயர்ந்த பொருட்களை திருடிச் செல்லும் பல வீடியோக்களை பார்த்திருக்கிறோம். குரங்குகள் மனிதர்களிடமிருந்து பறித்து செல்லும் பொருட்களை மீட்பது மக்களுக்கு மிகவும் சிரமமான விஷயமாக பெரும்பாலும் மாறி விடுகிறது. இந்நிலையில் சமீபத்தில் உத்திரபிரதேச மாநிலம் மதுராவில் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்ணாடியை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

    மதுரா மாவட்டத்தில் உள்ள விருந்தாவனத்தில் குறும்புக்கார குரங்கு ஒன்று மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்ணாடியை தூக்கி செல்லும் வீடியோ அங்கிருந்த கேமராவில் சிக்கியது. இதை தொடர்ந்து குரங்கிடம் சிக்கிய கண்ணாடியை மீட்க அதிகாரிகள் பட்ட பாடு அடங்கிய வீடியோ சோஷியல் மீடியாக்கள் மூலம் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

    Read More : கைக்குழந்தையை தோளில் சுமந்து சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டும் நபர் - நெஞ்சை ரணமாக்கும் வைரல் வீடியோ!




    இந்த சம்பவத்தின் வீடியோவை இந்திய வனச் சேவை (IFS) அதிகாரி பிரவீன் கஸ்வான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வைரல் வீடியோவில் மாவட்ட மாஜிஸ்திரேட் நவ்னீத் சாஹல் மற்றும் பல போலீஸ்காரர்கள் ஒரு கட்டிடத்தின் கீழ் கூடி, கண்ணாடியை குறிப்பிட்ட குரங்கிடம் இருந்து எப்படியாவது மீட்டு விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பது தெரிகிறது. சற்று உயரமான இரும்பு படிக்கட்டுகளில் ஏறி அமர்ந்திருக்கும் குரங்கு சற்று நேரம் கண்ணாடியை தராமல் ஆட்டம் காட்டுகிறது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு இறுதியாக மாஜிஸ்திரேட் நவ்னீத் சாஹலின் கண் கண்ணாடியை குரங்கிடம் இருந்து மீட்கும் அதிகாரிகள், அதை அவரிடமே திருப்பி கொடுக்கும் காட்சியுடன் இந்த வைரல் வீடியோ முடிவடைகிறது.



    மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கண்ணாடியை தூக்கி சென்ற குரங்கு முதலில் அதை முகர்ந்து பார்த்துள்ளது. கீழே கூடிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் அவரது கண்ணாடியை திருப்பித் தரும்படி குரல் கொடுத்து அதை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மக்களின் கூச்சலை கண்டு சற்று பதற்றமடைந்த குரங்கு கண்ணாடியுடன் மேலும் உயரே சென்று சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓட முயன்றது.

    இறுதியில் அதிர்ஷ்டவசமாக குரங்குகளால் எடுக்கப்பட்ட பொருட்களை மீட்டெடுப்பதில் அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசிகள் மற்றும் பிற அதிகாரிகளின் உதவியுடன் மாஜிஸ்திரேட் தனது கண்ணாடியை திரும்ப பெற முடிந்தது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர். வைரல் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களிடம் இருந்து குரங்குகள் இது போன்று பொருட்களை மற்றும் தின்பண்டங்களை பறித்து சென்ற சம்பவம் பற்றிய நினைவுகளை வேடிக்கையாக கமெண்ட்ஸ் செக்ஷனில் ஷேர் செய்து உள்ளனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: India, Trending, Uttar pradesh

    அடுத்த செய்தி