உரிமையாளரை ஏமாற்றி நகைக் கடை கல்லாப் பெட்டியில் திருடும் குரங்கு..! வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

உரிமையாளரை ஏமாற்றி நகைக் கடை கல்லாப் பெட்டியில் திருடும் குரங்கு..! வைரலாகும் வீடியோ
குரங்கு சேட்டை
  • News18
  • Last Updated: November 14, 2019, 8:22 PM IST
  • Share this:
குரங்குகளின் குறும்புத்தனம் சில சமயங்களில் ரசிக்கும்படியாக இருக்கும். சில சமயம் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும். ஆனால் இந்த வீடியோவைப் பார்க்கும்போது இரண்டும் இருக்கிறது. ஆம்... காணும் நமக்கு ரசிக்கும் படியாகவும்..அதனிடம் மாட்டித் தவிக்கும் கடை உரிமையாளருக்கு எரிச்சலாகவும் இருக்கும்.

அப்படி என்ன செய்கிறது அந்த குரங்கு..?

குரங்குக்கு நகைக் கடையில் கடையில் வேலை செய்பவர் உணவு வைக்கிறார். திரும்பிச் செல்லும்போது கதவை சரியாக சாத்தாமல் செல்ல அந்த இடைவெளியில் குரங்கு நகைக்கடைக்குள் நுழைந்துவிடுகிறது. உள்ளே நுழைந்த குரங்கு கல்லா முன் அமர்ந்து ட்ராவைத் திறக்கிறது. கத்தை கத்தையாக பணத்தை கையில் எடுக்க அதை மாறி மாறி துரத்துகின்றனர் கடையில் இருப்பவர்கள். ஆனால் அது எப்படியோ பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டது. பின்னாடியே தொடர்ந்து செல்கிறார் உரிமையாளர்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
First published: November 14, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்