நோய்வாய்ப்பட்ட மூதாட்டியை அன்பாக கட்டியணைத்த குரங்கு - வைரலாகும் வீடியோ!

நோய்வாய்ப்பட்ட மூதாட்டியை அன்பாக கட்டியணைத்த குரங்கு

வயதான பெண்மணிக்கும் குரங்குக்கும் இடையிலான அன்பை பார்த்த அவரது உறவினர்கள் வியப்படைந்துள்ளனர்.

  • Share this:
    எதிர்பாராத தருணங்களில் நமக்கு மற்றவர்களிடம் இருந்து கிடைக்கும் அரவணைப்பு நமக்கு மன நிறைவை தரும். அது மனிதர்களிடம் இருந்து மட்டுமின்றி மிருகங்களிடம் இருந்தும் கிடைக்கும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் லாங்கூரில் நோய்வாய்ப்பட்ட மூதாட்டியை குரங்கு ஒன்று செல்லமாக கட்டியணைத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. குரங்கு அன்பு காட்டியதை பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்தனர்.

    ஜூலை 3ம் தேதி ட்விட்டர் பயன்பாட்டாளர் ஒருவர் பகிர்ந்த அந்த வீடியோவில், ஒரு படுக்கையில் மூதாட்டி ஒருவர் படுத்திருக்கும் நிலையில், அவருக்கு அருகே குரங்கு ஒன்று அமர்ந்திருப்பதைக் காணலாம், அதே நேரத்தில் அருகில் மற்றொரு பெண்மணி ஒரு மஞ்சள் சேலை அணிந்து நின்று கைகளை மடித்து சாமி கும்பிட்டவாறு புன்னகைக்கிறார்.

    அப்போது படுத்திருந்த மூதாட்டி குரங்கின் முதுகைத் தொடும்போது, ​​அந்த குரங்கு மெல்ல நகர்ந்து சென்று அவரைத் தழுவுகிறது. பின்னர், அந்த மூதாட்டியின் மீது அமர்ந்து அவர் மீது சாய்ந்து கொள்கிறது. அதாவது அவரது மார்பில் தலையை வைத்து தூங்குவது போல படுத்து கொள்கிறது. சிறிது நேரத்திற்கு பின்னர் கதவு வழியாக வெளியேறுகிறது.

    https://youtu.be/f61BU-PybNo

    இந்த சம்பவம் குறித்து விளக்கிய அந்த மூதாட்டியின் உறவினர்கள், அந்த வயதான பெண்மணி குரங்குக்கு தவறாமல் உணவளிப்பார், ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டதும் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவரை கடந்த சில நாட்களாக காணாததால் குரங்கு அவரை தேடி வீட்டிற்கே வந்துள்ளது என தகவல் அளித்துள்ளனர்.

    வயதான பெண்மணிக்கும் குரங்குக்கும் இடையிலான அன்பை பார்த்த அவரது உறவினர்கள் வியப்படைந்துள்ளனர். இதயத்தைத் தூண்டும் பிணைப்பால் விலங்கின் கனிவான நடத்தையையும் பாராட்டினர். தற்போது இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். யூடியூப்பில் ஒரு லட்சம் பேர் பார்வையிட்டு ஷேர் செய்து வருகின்றனர்.

    இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள பயனாளர் ஒருவர், “எனக்கு சொந்தமாக ஒரு குரங்கு இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், அது என்னை உடனடியாக குணப்படுத்தும்." என குறிப்பிட்டுள்ளார்.

    மற்றொரு பயன்பாட்டாளர், "குரங்கு அந்த வயதான அம்மாவிற்கு ஆசீர்வாதம் செய்துள்ளது என நான் நினைக்கிறன், அவர் உடனடியாக குணமடைவார் என்று கூறியுள்ளார். மஞ்சள் சேலையில் உள்ள பெண் வணங்கினார், ஏனென்றால் லாங்கர்கள் இந்து தெய்வமான ஹனுமான் போலவே குரங்கை கருதுகிறார்கள் என யூசர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: