திருமணம் என்பது பலருக்கும் மகிழ்ச்சிக்குரிய, வாழ்க்கையில் மிகவும் மறக்க முடியாத தருணமாக அமைந்திருக்கும். அந்த தருணங்களை wedding photoshoot, Pre wedding photoshoot செய்து சேமித்து வைத்துகொள்கின்றனர். போட்டோஷூட்களின் போது சில சுவாரஸ்யமான சம்பவங்களும் அரங்கேறுகின்றன.
சமீபத்தில் கேரளாவில் போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டிருந்த ஒரு திருமண ஜோடியை, பின்னால் நின்றிருந்த யானை தென்னை மட்டையை வீசி விரட்டியடித்த வீடியோவை நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். இதுபோலவே ஆனால் மகிழ்ச்சிக்குரிய இன்னொரு சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
பூங்காவில் தம்பதியருக்கு போட்டோஷுட் நடந்துகொண்டிருந்தது. மணமகன் தன்னுடைய இணையருடன் காதலுடன் சுழன்றுகொண்டிருக்க, அதனை பார்த்து பரவசமடைந்த குரங்கு ஒன்று தன்னுடைய குட்டியை சுமந்தபடி அவர்களின் அருகில் வந்தது. இதனால் பதறிப்போன மணப்பெண் தள்ளிப்போக, மணமகனின் இடுப்பில் குட்டியுடன் ஏறிய குரங்கு போட்டோவுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் இருவருக்கும் செல்லமானது. பின்னர் குரங்கு அங்கிருந்து சென்றுவிட இருவரும் மீண்டும் போட்டோ ஷூட் நடத்தினர்.
View this post on Instagram
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோகிராபர், “எங்களால் இதனை நம்பமுடியவில்லை. குரங்கு தனது குட்டியுடன் போட்டோ ஷீட்டில் கலந்துகொண்டதை நாங்கள் சிறந்த தருணமாக கருதுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர, 2.9 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளதோடு, நூற்றுக்கணக்கான வரவேற்பு கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Monkey, Viral Videos, Wedding Photoshoots