Viral Video : கோழிகுஞ்சுகளோடு நட்பு பாராட்டும் குரங்கு... இணையத்தை கலக்கும் கியூட் வீடியோ

Monkey calms down little chicken

குரங்கும் கோழிக்குஞ்சும் இணைந்து ஒன்றாக உணவு உண்கிறது, வாக்கிங் செல்கிறது, படுத்து தூங்குகின்றது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் அன்பு மழையை கமெண்ட்ஸ்சில் பொலிந்து வருகின்றனர்.

  • Share this:
    குட்டி குரங்கு ஒன்று கோழி குஞ்சுகளோடு நட்பு பாராட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    Innocent is innocent does என்ற தலைப்போடு அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், குரங்கும் கோழிக்குஞ்சும் இணைந்து ஒன்றாக உணவு உண்கிறது, வாக்கிங் செல்கிறது, படுத்து தூங்குகின்றது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்கள் அன்பு மழையை கமெண்ட்ஸ்சில் பொலிந்து வருகின்றனர்.

    மேலும், இதற்கு முன்னதாக சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட யானையின் மண் குளியல் வீடியோ இணையத்தில் தீயாய் பரவியது. Happiness is enjoying these little things in life என தலைப்பிட்டு யானை குட்டிகள் மண்ணில் புரண்டு விளையாடுவதை மற்றொரு யானை அருகில் நின்று பார்த்துக்கொண்டு இருப்பது போல் வெளியிட்டிருந்தார்.





    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: