ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பள்ளி முதல் இப்போது வரை திங்கட்கிழமை உங்களை திணற வைக்கிறதா? உங்களுக்கான பதிவு தான் இது...

பள்ளி முதல் இப்போது வரை திங்கட்கிழமை உங்களை திணற வைக்கிறதா? உங்களுக்கான பதிவு தான் இது...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Monday Blues | சனி ஞாயிறு மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்கும் காதலை பிரிந்து வாடும் சோகத்தை திங்கட்கிழமை தருகிறது போலும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திங்கட்கிழமை என்றால் பெரும்பாலானோருக்கு பிடிக்காத நாளாகவே இருக்கிறது என்று ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பள்ளி காலம் முதல் வாரத்தில் உள்ள 7 நாட்களில் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை திங்கட்கிழமை வகுப்பு என பழக்கப்பட்டதால் கூட இவ்வாறு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.இதனை ஆங்கிலத்தில் MondayBlues என்று சொல்வார்கள்.

நீங்களே ஒரு நிமிடம் உங்கள் பள்ளி பருவத்தை நினைத்துப் பாருங்கள், ஞாயிற்றுகி கிழமை இரவே திங்கட்கிழமை முதல் பாட வேளையில் எந்த ஆசிரியர் வருவார், அனைத்து வீட்டுப்பாடங்களும் முடித்து விட்டோமா, என தொடங்கி தேர்வுகள், செமினார், என அனைத்தும் அணிவகுத்து நமக்காக காத்துக்கொண்டிருக்கும். இதை படிக்கும்பொழுதுக் கூட சிலருக்கு அந்த நாட்கள் நியாபகம் வரலாம். கல்லுரியிலும் இதே கதை தான்.

அதேபோல் வேலையிடமும் இதற்கு குறந்தது அல்ல. அனைத்து இலக்குகளையும் திட்டமிட வேண்டும், வாரத்திற்கான பணிகளை முடிக்க வேண்டும் அடுத்த வெள்ளிக்கிழமை வரை ஓயாமல் பணி செய்ய வேண்டும் என பல்வேறு பக்கமாக நம் மூளை சிதறிக்கொண்டிக்கும். இப்படித்தான் பலரும் திங்கட்கிழமைகளை வெறுக்கத் தொடங்குகிறார்கள்.

Read More : ஆனந்த் மஹிந்த்ரா சொன்ன Monday Motivation...வைரலாகும் வீடியோ

இன்னும் சொல்ல வேண்டுமெனில் சனி ஞாயிறு மேல் காதல் கொண்ட ஒவ்வொருவருக்கும் காதலை பிரிந்து வாடும் சோகத்தை திங்கட்கிழமை தருகிறது போலும். இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என ஆராயும் போது, தான் கொண்ட வேலை, செல்லும் பள்ளி கல்லூரி மீது பிரியம் இல்லாததே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு நாம் நம்மை முதலில் தயார் படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

உங்கள் திங்கட்கிழமையை எளிதாக்கும் வழிமுறைகள்:

நீங்கள் செய்யும் வேலை மேல் காதல் கொள்ளுங்கள்: உங்கள் வேலை மீது காதல் கொள்ளுங்கள். விடுமுறை முடிந்து செல்லும் போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுங்கள். அதற்காக உங்களை தயார்ப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு வேலையை பிடித்து செய்யும்பொழுது அதுக் கொடுக்கும் சக்தி அலாதியானாது.
உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்: புதியதாக 7 நாட்கள் கையில் இருக்கிறது அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என சிந்தியுங்கள். சரியோ தவறோ நம்மால் முடிந்தவற்றை செய்து பார்த்தாக வேண்டும் என்ற கர்வம் கொள்ளுங்கள். புத்துணர்ச்சியுடன் புதிய எண்ணங்களை மனதில் கொள்ளுங்கள்.
உங்கள் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்: தன்னம்பிக்கை என்பது அவசியம். உங்கள் வாழ்க்கைக்கான பாதை மற்றும் பயணத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். அனைத்தும் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு படி என்பதை மனதில் நிறுத்துங்கள். ஒவ்வொரு நாளையும் அழகாக ஆழமானதாக மாற்ற வேண்டும் என நினைத்து அந்நாளிற்குள் நுழையுங்கள்..
பணிகளை சரியான நேரத்தில் முடியுங்கள்: ஒரு வாரத்திற்கான பணியை கூடுதல் நேரம் செலவிட்டாவது அந்த வாரத்திலேயே முடித்துவிடுங்கள். பணிச்சுமையை அடுத்த வாரத்திற்கான பணியோடு சுமத்தாதீர்கள். அந்தந்த நாட்களிலேயே முடித்தால் இன்னும் நல்லது.
பாசிட்டிவான எண்ணங்களுடன் இருங்கள்: எதைக் கண்டும் அஞ்சாதீர்கள். பாசிட்டீவான எண்ணங்களையும் பார்வைகளையும் கொள்ளுங்கள். ஒரு செயலை செய்து முடிப்பதற்கான வழிகளை தேடுங்கள் அவை கிடைக்கும் வரை நேர்மறை எண்ணங்களுடன் தொடந்து முயற்சியுங்கள்.உங்களை சுற்றி நேர்மறை எண்ணங்கள் இருப்பதை எப்போதும் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
விடுமுறையை நன்றாக பயன்படுத்துங்கள் : பணிச்சுமை என்பது அனைத்து இடங்களிலும் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நாம் நமது மனதையும் உடலையும் கவனித்துக்கொள்ள வேண்டும். விடுமுறை நாட்களில் நம் மனதை ஆசுவாசப்படுத்தும் செயல்களில் ஈடுபட வேண்டும். நம் கோவம், அசதி, துக்கம் அனைத்திலிருந்தும் நம்மை விடுவிக்கும்படியான செயல்களில் ஈடுபடுவது நல்லது.
அதிகம் சிரிக்கவும் அதிகம் ரசிக்கவும்செய்யுங்கள்: உங்களை சுற்றியுள்ள மனிதர்கள் விலங்குகள் இயற்கையை உற்று நோக்குங்கள். இந்த வாழ்க்கை உங்களை எவ்வளவு முன்னேற்றியுள்ளது என நினைத்துப் பாருங்கள். அதிகம் உரையாடுங்கள் சிரியுங்கள். உங்கள் வாழ்க்கைகான மகிழ்ச்சி ஊற்றை உங்களிடத்திலிருந்து கண்டுபிடியுங்கள்.
முன்கூட்டியே தாயாராகுங்கள் : இதுதான் செய்யப்போகிறோம், இது தான் திட்டம் என அனைத்தையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களின் ஊக்கத்திற்கான அச்சாணியாய் நீங்களே இருங்கள். அடுத்த வாரத்திற்கான சவால்கள் மற்றும் வேலையை புன்னகைத்தப்படி தொடங்குங்கள்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Lifestyle, Mental Health, Monday blues