நெட்டிசனுக்கு மோடி சொன்ன பதில்... ட்ரெண்ட் ஆகும் #CoolestPM ஹேஷ்டேக்...!

நெட்டிசனுக்கு மோடி சொன்ன பதில்... ட்ரெண்ட் ஆகும் #CoolestPM ஹேஷ்டேக்...!
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: December 26, 2019, 4:35 PM IST
  • Share this:
சூரிய கிரகணத்தை ஒட்டி பிரதமர் மோடி பதிவிட்ட புகைப்படம், மீமாக மாறும் என்று நெட்டிசன் ஒருவர் குறிப்பிட பிரதமர் மோடியும் கூலாக பதிலளித்துள்ளார்.

சூரிய கிரகணம் இன்றி நிகழ்ந்ததை ஒட்டி பிரதமர் மோடி காலையில் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார். “பல இந்தியர்களைப் போல சூரிய கிரகணத்தை பார்க்க ஆர்வமாக இருந்தேன், மேக மூட்டத்தால் கிரகணத்தை பார்க்க முடியவில்லை.

எனினும், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேரலை வீடியோ மூலம் பார்த்தேன். வானியல் நிபுணர்கள் உடன் கலந்தாலோசித்து, இதுதொடர்பான என்னுடைய அறிவை வளப்படுத்திக் கொண்டேன்” என்று அவர் கூறியிருந்தார்.





அதில் அவர் வானத்தை நோக்கி உற்றுநோக்கிய படத்தை பதிவிட்டு ஒரு இளைஞர், இது மீம்ஸ் ஆக வந்துள்ளது என்று ட்வீட் செய்திருந்தார்.



இதனை ரீ-ட்வீட் செய்திருந்த பிரதமர் மோடி, மிகவும் வரவேற்கத்தக்கது என்ஜாய் என்று பதில் அளித்திருந்தார். மோடியின் இந்த பதில் இன்றைய வைரல் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இதனை ஒட்டி, இந்த பதிலானது ##CoolestPM என்ற ஹேஷ்டேக்கில் வைரலாகி வருகிறது.
First published: December 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்