1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் உருவான நவீன மனித மூளை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவில் உருவான நவீன மனித மூளை: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

மாதிரி படம்

சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோ இனத்தின் முதல் மக்கள் நேராக நடந்து சென்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஆதிகாலத்தில் நம் மனித குளம் குரங்குகளில் இருந்து தோன்றியது என வரலாற்று பதிவுகள் இருக்கின்றன. சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் தோன்றிய ஹோமோ இனத்தின் முதல் மக்கள் நேராக நடந்து சென்றனர். ஆனால் அவர்களுக்கு பழமையான குரங்குக்கு இருப்பது போன்ற மூளை இருந்தது. அதாவது நம்முடைய மூளையின் பாதி அளவு மட்டுமே இருந்தது. இப்போது நம்மில் எழும் மிகவும் சுவாரஸ்யமான கேள்விகளில் ஒன்று, இந்த நவீன மனித மூளை எப்போது, எங்கே உருவானது? என்பது தான்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்தின் சூரிச் பல்கலைக்கழகத்தின் (UZH) சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு இதுகுறித்து ஆராய அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிட்டனர். இதையடுத்து, நவீன மனித மூளை ஆப்பிரிக்காவில் சுமார் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கண்டறிந்துள்ளனர். அழிந்துபோன மனித இனமான ஹோமோரெக்டஸ் முதன்முதலில் தோன்றிய காலம் அது. மேலும் ஆப்பிரிக்காவில் கல் கருவிகளின் கலாச்சாரம் பெருகிய முறையில் சிக்கலானதாக மாறிய காலம் என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

ஹோமோரெக்டஸ் இனங்கள் ஆப்பிரிக்காவிலிருந்து முதன் முதலில் வெளியேறிய ஹோமினின் மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஏனெனில், அந்த காலத்தில் இவர்கள் தகவல் தொடர்பு மற்றும் வேட்டையாடுதல், உணவு சேகரிப்பு போன்ற அறிவாற்றல் பணிகளில் மிகவும் திறமையானவர்களாக இருந்தனர். இந்த வழக்கமான மனித மூளை ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு வேகமாக பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Also read... பூமியை நோக்கி வளி மண்டலத்தில் மற்றொரு சிறிய கோள் மிக வேகமாக வருகிறது - நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ஜர்னல் சயின்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வின்படி, சுமார் 1 முதல் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வாழ்ந்த ஹோமோ புதைபடிவங்களின் மண்டை ஓடுகளை கிறிஸ்டோஃப் சோலிகோஃபர் மற்றும் மார்சியா போன்ஸ் டி லியோன் தலைமையிலான UZH குழு ஆய்வு செய்தது. இது குறித்து பேசிய சோலிகோஃபர், "நவீன மனித மூளை கட்டமைப்புகள் 1.5 முதல் 1.7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க ஹோமோ மக்களில் மட்டுமே தோன்றின என்று எங்கள் பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன" என்று கூறியுள்ளார்.

இதற்கெடுத்ததாக பேசிய மானுடவியலாளர் போன்ஸ் டி லியோன், "மனிதர்களுக்கு உள்ள பொதுவான அம்சங்களில் முதன்மையாக இருப்பது மூளை தான். அவை சிந்தனை மற்றும் செயலின் சிக்கலான வடிவங்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கிறது. இறுதியில் மொழிக்கும் இதுவே காரணமாக அமைத்துள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளார். உயிரியல் மற்றும் கலாச்சார பரிணாமம் அநேகமாக இந்த மாற்றங்களுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் அந்தக் காலகட்டத்தில் மனித மொழியின் ஆரம்ப வடிவங்களும் வளர்ந்திருக்கலாம் என்று போன்ஸ் டி லியோன் கூறினார். 1 முதல் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் வாழ்ந்த ஹோமோ புதைபடிவங்களின் மண்டை ஓடுகளை ஆய்வு செய்ய UZH ஆராய்ச்சிக்குழு கணக்கிடப்பட்ட டோமோகிராஃபியைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் புதைபடிவத் தரவை மனித குரங்குகள் மற்றும் மனிதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு தரவுகளுடன் ஒப்பிட்டுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: