ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மேலாடையின்றி மேடைக்கு வந்த பெண்.. வெறும் ஸ்பிரே தான் ஆடையே.. இணையத்தை வியப்பில் ஆழ்த்திய ஃபேஷன் ஷோ!

மேலாடையின்றி மேடைக்கு வந்த பெண்.. வெறும் ஸ்பிரே தான் ஆடையே.. இணையத்தை வியப்பில் ஆழ்த்திய ஃபேஷன் ஷோ!

ஸ்பிரே அடுத்து ஆடை வர வைத்த நிகழ்வு

ஸ்பிரே அடுத்து ஆடை வர வைத்த நிகழ்வு

ஸ்பிரே அடித்தே ஆடையை வடிவமைத்த நேரடி நிகழ்வின் வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • internatio, IndiaParisParisParisParisParis

  பாரிஸ் ஃபேஷன் வாரத்தில் நடைமேடையில் பிரபல மாடலுக்கு வெறும் ஸ்பிரே அடித்தே ஆடையை வடிவமைத்த நேரடி நிகழ்வின் வீடியோ இணையத்தில் பெருமளவு பகிரப்பட்டு நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உள்ளாடையுடன் வந்தவருக்கு ஸ்பிரே மூலம் ஆடை வரவைக்கப்பட்டது எப்படி என்பதை நெடிசன்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

  பெல்லா ஹடிட் என்ற பிரபல சூப்பர் மாடல் பாரிஸில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான கோப்பர்னிஸ் ஸ்ப்ரிங் ஃபேஷன் நிகழ்ச்சியில் நேரடியில் ஸ்பிரே மூலம் உடலில் வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து காட்வாக் செய்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

  அதில் நடைமேடையில் பெல்லா ஹடிட் உள்ளாடை மட்டும் அணிந்து நடந்து வர அவரின் மேல் நேரடியாக வெள்ளை நிற ஸ்பிரே அடித்து ஆடை உருவாக்கப்பட்டுள்ளது. இது ஃபேஷன் உலகில் நவீன புரட்சியாக அமைந்துள்ளது.
   
  View this post on Instagram

   

  A post shared by Diet Prada ™ (@diet_prada)  பாரிஸில் அமைந்துள்ள பிரெஞ்சு பெண்கள் ஆடை தயாரிப்பு நிறுவனமான கோப்பர்னிஸ், 2023 ம் ஆண்டுக்கான ஸ்ப்ரிங் கலக்சன்னாக இந்த வினோத ஆடை அமைப்பை உருவாக்கியுள்ளனர். ஃபேப்ரிக்கன் என்ற பொருளைப் பயன்படுத்தி ஸ்பிரேவில் இருந்து வெளிவரும் துளிகள் திடமாக மாறி ஆடையாகும் முறையைப் பயன்படுத்தி அவர்கள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

  Also Read : 2 முகங்களுடன் பிறந்த குழந்த உயிர் பிழைப்பதே கடினம் என்ற டாக்டர்... 18 வது பிறந்தநாளை கொண்டாடினார்

  ஆடை வடிவமைப்பாளர்கள் செபாஸ்டின் மேயர் மற்றும் அர்னாட் வைலண்ட் இந்த ஆடை வடிவமைத்தாக கூறப்படுக்கிறது. ’பெண்களின் உலகம்’ என்ற தலைப்பில் ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒழுக்கத்தின் முள் வெளியில் உங்கள் பார்வையை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாத பெண்களுக்கு இந்த படைப்பு என்று ஃபேஷன் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  நடைமேடையில் பெல்லா ஹடிட் மாடல் மேல் ஸ்பிரே அடித்து முடித்த பின் ஆடை சரிசெய்யப்பட்டு நிறைவாக அவர் எடுத்த தோற்றம் அங்கு இருந்தவர்கள் மட்டும் அல்ல உலக ஃபேஷன் வட்டாரத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Fashion, Paris