Home » News » Trend

ஓ கெட்டப் மாத்தி வரியா...பப்ஜியை வரவேற்கும் இணையவாசிகள்!

இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 2 புதிய மொபைல் விளையாட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது இதனிடையே இணையத்தில் #pubgmobileindia என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதில் ட்வீட் செய்து வருகின்றனர்.

ஓ கெட்டப் மாத்தி வரியா...பப்ஜியை வரவேற்கும் இணையவாசிகள்!
பப்ஜி
  • Share this:
இந்தியாவில் பப்ஜி விளையாட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், இந்திய சந்தைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட 2 புதிய மொபைல் விளையாட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பப்ஜி விளையாட்டுகளுக்கு அண்மையில் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்திய மொபைல் விளையாட்டு சந்தையில் மீண்டும் நுழையும் முயற்சியில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இதற்காக இந்தியாவிற்கென பிரத்யேகமான 2 மொபைல் விளையாட்டுகளை பப்ஜி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் இதற்கென நிறுவனத்தை அமைக்கவும், புதிதாக 100 பணியாட்களை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையத்தில் பப்ஜி பிரியர்கள் இது குறித்து பதிவிட்டு வருகின்றனர்.


 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

 



 

புதிய நிறுவனம் "பப்ஜி மொபைல் இந்தியா" என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக செயல்படும் என பப்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
First published: November 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading