• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா - இணையத்தில் வைரலாகும் வீடியோ

கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா

கணவருடன் கபடி விளையாடிய நடிகை ரோஜா

MLA Roja plays kabaddi : ஆர்.கே செல்வமணி மற்றும் மாணவர்கள் ஒரு அணியாகவும் , ரோஜா தலைமை ஒரு அணியாகவும் நின்று விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

  • Share this:
    இளைஞர்களுடன் நடிகை ரோஜா கபடி விளையாடும் வீடியோ யூடியூபில் வைரலாகி வருகின்றது.ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே முன்னாள் நடிகையும் , சட்ட மன்ற உறுப்பினருமான நடிகை ரோஜா இளைஞர்களுடன் கபடி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    தமிழில் செம்பருத்தி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ரோஜா. 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த இவர், உழைப்பாளி, அதிரடி படை, சூரியன், வீரா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

    தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்த இவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிப்பை குறைத்து, அரசியலில் ஆர்வம் காட்ட தொடங்கினார். தற்போது ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் ரோஜா.



    இந்நிலையில் ரோஜா அறக்கட்டளை சார்பில் நேற்றைய தினம் (நவம்பர் 1) ம் தேதி முதல் 15ம் தேதி வரை நகரி சட்டமன்ற தொகுதியில் உள்ள டிகிரி கல்லூரி மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க தனது கணவர் ஆர்.கே செல்வமணியுடன் சென்ற நடிகை ரோஜா , பச்சை கொடி காட்டி போட்டிகளை தொடங்கி வைத்தார். ஆர்.கே செல்வமணி மற்றும் மாணவர்கள் ஒரு அணியாகவும் , ரோஜா தலைமை ஒரு அணியாகவும் நின்று விளையாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: