போட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய கைப்பந்து வீராங்கனை! மனதை உருக்கும் புகைப்படம்

போட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய கைப்பந்து வீராங்கனை! மனதை உருக்கும் புகைப்படம்
கைப்பந்து வீராங்கனை
  • News18
  • Last Updated: December 10, 2019, 4:22 PM IST
  • Share this:
மிசோரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியின் இடையே கைக்குழந்தைக்கு பால் கொடுத்த கைப் பந்து வீராங்கனையின் போட்டோ இணையத்தில் வைரலாகிவருகிறது. பலரும் அந்தப் பெண்ணை பாராட்டிவருகின்றனர்.

மிசோரம் மாநிலம் துய்கும் மாவட்டத்தைச் சேர்ந்த கைப்பந்து வீராங்கனை லால்வென்ட்லுவாங்கி. அவர், மிசோரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தொடக்க விழாவில் கைப்பந்து போட்டியில் லுவாங்கி கலந்துகொண்டார். அவருடன் ஏழு மாதக் குழந்தையையும் எடுத்துச் சென்றிருந்தார். போட்டி இடைவேளையின் லுவாங்கி அவரது ஏழு மாதக் குழந்தைக்கு பால் கொடுத்தார்.

அந்தப் போட்டோ இணையத்தில் வைரலானது. மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ரோய்டி, அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, லுவாங்கிக்கு பாரட்டு தெரிவித்திருந்தார். மேலும், அந்தப் பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் அறிவித்தார். அந்தப் போட்டியில் லுவாங்கி பங்கேற்ற அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Also see:

First published: December 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading