மாஸ்டர் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு 5-ம் இடம்...! முதல் மூன்று இடங்கள் யாருக்குத் தெரியுமா?

மாஸ்டர் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு 5-ம் இடம்...! முதல் மூன்று இடங்கள் யாருக்குத் தெரியுமா?
மாஸ்டர்
  • Share this:
பிரபல பண்பலை பட்டியலிட்ட டாப் 20 சாங்ஸ் பட்டியலில் மாஸ்டரின் குட்டி ஸ்டோரிக்கு 5-ம் இடம் கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் விஜய் தனது சொந்தக் குரலில் பாடி அசத்தியிருந்த இந்தப் பாடலுக்கு யூடியூபில் இதுவரை 24 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 1.4 மில்லியன் லைக்ஸ்கள் கிடைத்துள்ளன.

ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் பாடலுக்கு மிர்ச்சி டாப் 20 சாங்ஸ் பட்டியலில் 4-ம் இடம் கிடைத்துள்ளது. மிர்ச்சி பண்பலை வெளியிட்ட பட்டியலில், முதலிடத்தில் ஓ மை கடவுளே பட பாடலும், இரண்டாம் இடத்தில் நான் சிரித்தால் பட பாடலும் உள்ளது.


மூன்றம் இடத்தில் தர்பார் படத்தின் தரம் மாறா சிங்கிள் என்ற பாடலும், 4-ம் இடத்தில் சூரரைப் போற்று படத்தின் வெய்யோன் சில்லி பட பாடலும் உள்ளது. இந்த வரிசையில் 5-ம் இடத்தை மாஸ்டரின் குட்டி ஸ்டோரி பாடல் பெற்றுள்ளது.

இக்கருத்துகணிப்பு முடிவுகள் அதிக பார்வையாளர்கள் விரும்பி கேட்ட பாடலை ஒலிபரப்பியதன் அடிப்படையிலும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங், பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டிருப்பதாக பண்பலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க: இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை...! ‘துப்பறிவாளன் 2’ பற்றி மௌனம் கலைத்த விஷால்!


First published: February 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading