ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

காயமடைந்த ராணுவ வீரரின் மார்பில் இருந்த "அந்த பொருள்" - ஷாக்கான மருத்துவர்கள்.! ரிஸ்க்கான ஆப்ரேஷன்..

காயமடைந்த ராணுவ வீரரின் மார்பில் இருந்த "அந்த பொருள்" - ஷாக்கான மருத்துவர்கள்.! ரிஸ்க்கான ஆப்ரேஷன்..

அறுவைசிகிச்சையில் மருத்துவர்கள் எடுத்த வெடிகுண்டு

அறுவைசிகிச்சையில் மருத்துவர்கள் எடுத்த வெடிகுண்டு

உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி Hanna Maliar சோஷியல் மீடியாவில், ஒரு அதிசய அறுவை சிகிச்சையில் உக்ரேனிய ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் அச்சமற்ற குழு ராணுவ வீரர் ஒருவரின் உடலில் இருந்து வெடிக்காத வெடிகுண்டை வெற்றிகரமாக அகற்றி இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ராணுவ வீரர் ஒருவரது மார்பில் இருந்த குண்டை அகற்றி அவரை காப்பாற்றியதற்காக உக்ரைனில் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவ குழுவினர் ஹீரோக்களாக பார்க்கப்படுகின்றனர். ராணுவ வீரரின் உடலில் இருந்து குண்டை அகற்றுவது மருத்துவர்கள் எப்போதும் வழக்கமாக மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை தானே.!

அதற்கு ஏன் குறிப்பிட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவினர் ஹீரோக்களாக போற்றப்படுகின்றனர் என்ற சந்தேகம் உங்களுக்கு வருகிறதா.! அதற்கு ஸ்பெஷல் காரணம் ஒன்று இருக்கிறது. உக்ரைனில் உள்ள பாக்முட் (Bakhmut) என்ற இடத்தில் நடந்த ஒரு பயங்கர ரத்த களரியான போரின்போது நிகழ்ந்த சண்டையில் ஒரு உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் தான் அவரது உடலில் இருந்து குண்டு ஒன்றை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அகற்றி உள்ளனர். அவர்கள் குறிப்பிட்ட ராணுவ வீரரின் உடலில் இருந்து அகற்றியது துப்பாக்கி குண்டை அல்ல.! கையெறி குண்டு.. ஆம் அதுவும் வெடிக்காத நிலையில் இருந்த கையெறி குண்டை ராணுவ வீரரின் உடலில் இருந்து அகற்றியதுதான் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. ராணுவ வீரரின் உடலில் இருந்து வெடிகுண்டை வெடிக்காமல் அகற்றி இருக்கும் இந்த ஆப்ரேஷனை "மிராக்கிள் சர்ஜரி" என்று கூறலாம்.

இது தொடர்பாக உக்ரைனின் துணை பாதுகாப்பு மந்திரி Hanna Maliar சோஷியல் மீடியாவில், ஒரு அதிசய அறுவை சிகிச்சையில் உக்ரேனிய ராணுவ அறுவை சிகிச்சை நிபுணர்களின் அச்சமற்ற குழு ராணுவ வீரர் ஒருவரின் உடலில் இருந்து வெடிக்காத வெடிகுண்டை வெற்றிகரமாக அகற்றி இருப்பதாக கூறி இருக்கிறார். மேலும் ஆப்ரேஷனின் போது எந்த வினாடியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம் என்ற மிகப்பெரும் அபாயம் இருந்த போதிலும், மிகவும் அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒருவரான, அறுவை சிகிச்சை நிபுணர் மேஜர் ஜெனரல் Andrii Verba தலைமையிலான நிபுணர்கள் குழு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கையெறி குண்டை அகற்றி இருக்கிறது.

மேலும் இதற்கு ஆதாரமாக அடையாளம் தெரியாத ராணுவ வீரரின் மார்பில் இதயத்திற்கு அருகில் கையெறி குண்டு இருப்பதை காட்டும் உடலின் எக்ஸ்ரே இமேஜ்களையும் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து இருக்கிறார். இந்த எக்ஸ்ரே இமேஜ் ராணுவ வீரரின் மார்பில் கையெறி குண்டு இருக்கும் இடத்தை காட்டுகிறது. ஷேர் செய்யப்பட்டுள்ள மற்றொரு எக்ஸ்ரே இமேஜில் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆப்ரேஷன் செய்த அறுவை சிகிச்சை நிபுணர் அகற்றப்பட வெடிகுண்டை கையில் பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த எக்ஸ்ரே இமேஜ் கையெறி குண்டு இருப்பதை வெளிப்படையாக காட்டுவதை அடுத்து சோஷியல் மீடியாவில் வைரலானது. ஆப்ரேஷன் செய்து அகற்றப்பட்ட கையெறி குண்டின் வகை VOG grenade என்று கூறப்படுகிறது. மேலும் இது வெடிக்காத கையெறி குண்டு என்பதால் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆப்ரேஷனின் போது ராணுவத்தை சேர்ந்த 2 வெடிகுண்டு நிபுணர்களும் உடன் இருந்துள்ளனர்.

இந்த அபாயகரமான அறுவைசிகிச்சை எப்போது நடைபெற்றது அல்லது ராணுவ வீரரின் உடலில் கையெறி குண்டு எவ்வாறு நுழைந்தது என்பதை பற்றி உக்ரைன் ராணுவம் எந்த தகவலையும் குறிப்பிடவில்லை. இதற்கிடையில் சோஷியல் மீடியா யூஸர்கள் தலைமை மருத்துவரின் துணிச்சலை கண்டு பிரமித்து, ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றியதற்காக பாராட்டும், நன்றியும் தெரிவித்து உள்ளனர்.

First published:

Tags: Russia - Ukraine, Trending, Viral