பொருளாதார மந்த நிலை.. நிர்மலா சீதாராமன் பேசியபோது தூங்கி வழிந்த அமைச்சர்கள்..!

பொருளாதார மந்த நிலை.. நிர்மலா சீதாராமன் பேசியபோது தூங்கி வழிந்த அமைச்சர்கள்..!
அமைச்சர்கள் தூங்கும் காட்சி
  • Share this:
நாட்டின் பொருளாதாரம் குறித்து நிர்மலா சீதாராமன் பேசிய போது பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர்கள் தூங்கி விழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மந்த நிலை இல்லை. வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தாலும் மந்த நிலைக்கு செல்லவில்லை. அந்த சூழ்நிலையும் வராது என்று ஆக்ரோஷமாக தன் வாதத்தை முன் வைத்து விளக்கமறிக்கிறார்.

அப்போது பின்னால் அமர்ந்திருந்த மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தூங்கி விழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.இப்படி பொருளாதார மந்த நிலைக் குறித்து பேசிக் கொண்டிருக்கும் தருணத்தின் போது தூங்கி விழும் அமைச்சர்களின் பொறுப்புணர்வு குறித்து எதிர்மறையான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றனர்.

 

 
First published: November 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்