ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இந்த உலகம் அனைவருக்குமானது...! சிரிப்பால் மனதை வென்ற குரங்கு... இந்த ஆண்டு இணையத்தில் வைரலான புகைப்படம்...!

இந்த உலகம் அனைவருக்குமானது...! சிரிப்பால் மனதை வென்ற குரங்கு... இந்த ஆண்டு இணையத்தில் வைரலான புகைப்படம்...!

சிரிப்பால் மனதை வென்ற குரங்கு

சிரிப்பால் மனதை வென்ற குரங்கு

இன்று உலக குரங்குகள் தினம் … காரில் பயணித்த நபர் ஒருவர் ஆரஞ்சு பழம் ஒன்றை குரங்கிற்கு அவர் அளிக்க அதனை பெற்றுக்கொண்ட குரங்கு புன்னகையை நன்றியாக தெரிவிக்கின்றது. குரங்கின் இந்த புகைப்படம் இந்த ஆண்டு இணையத்தில் வைரலானது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்த ஆண்டு இணையத்தில் குரங்கு ஒன்று ஒரு புன்னகையால் இணையத்தில் அனைவரது மனங்களையும் வென்றது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கும் சூழலில், தெருக்களில் உள்ள நாய்களும், பூனைகளும் ஏனைய பறவை இனங்களும் உண்ண உணவின்றி தவித்து வந்தனர்.

சில இடங்களில் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து மாஸ்க் அணிந்தவாறு விலங்கினங்களுக்கு உணவு வழங்கினர். இதனிடைய காரில் பயணித்த நபர் ஒருவர் குரங்கிற்கு உணவு அளித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.

அதில், காரில் பயணித்த நபர் ஒருவர் ஆரஞ்சு பழம் ஒன்றை குரங்கிற்கு அளிக்க அதனை பெற்றுக்கொண்ட குரங்கு புன்னகையை நன்றியாக தெரிவிக்கின்றது. குரங்கின் இந்த செயல் இணையத்தில் பலரின் மனங்களையும் வென்றது . சிலர் இந்த உலகம் அனைவருக்குமானது என்றபடி இதனை ஷேர் செய்து வந்தனர் .


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published:

Tags: Lockdown, Monkey, Trends