Home /News /trend /

கனவுகளை சுமந்து ஓடும் ரன்னிங் பாய் பிரதீப் மெஹ்ரா.. வைரல் வீடியோவால் குவிந்த நன்கொடை - யார் இவர்?

கனவுகளை சுமந்து ஓடும் ரன்னிங் பாய் பிரதீப் மெஹ்ரா.. வைரல் வீடியோவால் குவிந்த நன்கொடை - யார் இவர்?

Pradeep Mehra

Pradeep Mehra

Trending | தினந்தோறும் அலுவலகப் பணி முடிந்து, வீடு அமைந்துள்ள 10 கி.மீ. தூரம் வரை ஓட்டமாகவே சென்று சேருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிரதீப் மெஹ்ரா. சமீபத்தில் இவர் நள்ளிரவு பொழுதில் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

மேலும் படிக்கவும் ...
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதீப் மெஹ்ரா. சமீபத்தில் இவரைப் பற்றிய செய்தி டிரெண்டிங் ஆனதில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். தற்போது, நோயுற்று இருக்கும் தனது தாயாரின் சிகிச்சைக்காக ரூ 2.5 லட்சம் நன்கொடை பெற்றுள்ளார் பிரதீப் மெஹ்ரா. யார் இவர்? இவர் எப்படி பிரபலம் அடைந்தார் என்ற விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரதீப் மெஹ்ராவின் வீடு பரோலா பகுதியில் இருக்கிறது. அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16ஆவது பிரிவில் உள்ள மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இராணுவத்தில் சேர வேண்டும் என்பதே இவரது வாழ்க்கை இலட்சியம். அதே சமயம், வேலையை பார்த்துக் கொண்டே பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார் பிரதீப் மெஹ்ரா.

இத்தகைய சூழலில், தினந்தோறும் அலுவலகப் பணி முடிந்து, வீடு அமைந்துள்ள 10 கி.மீ. தூரம் வரை ஓட்டமாகவே சென்று சேருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் பிரதீப் மெஹ்ரா. சமீபத்தில் இவர் நள்ளிரவு பொழுதில் ஓட்டப் பயிற்சி செய்து கொண்டிருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

இதைத் தொடர்ந்து, பிரதீப் மெஹ்ரா குறித்தும், அவரது லட்சியம் குறித்தும் எண்ணற்ற மக்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, நல்லெண்ணம் கொண்ட பலர் அவருக்கு நன்கொடை வழங்கி உதவி செய்ய முன் வந்தனர். குறிப்பாக, ரீடெய்ல் பிராண்ட் ஷாப்பர்ஸ் ஸ்டாப் என்ற அமைப்பு சார்பில், பிரதீப் மெஹ்ராவின் கனவை நிறைவேற்றிக் கொள்ளவும், நோயுற்று இருக்கும் அவரது தாயாரின் சிகிச்சை செலவுகளை கவனித்துக் கொள்வதற்கும் ரூ.2.5 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.



இந்தச் செய்தியை திரைப்பட தயாரிப்பாளர் வினோத் கபாரி உறுதி செய்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “அனைவரின் பாராட்டு மற்றும் ஆதரவு ஆகியவற்றால் நள்ளிரவு பிரதீப் மெஹ்ரா மகிழ்ச்சியில் திளைக்கிறார். அவரின் கனவு நிறைவேறவும், தாயாரின் மருத்துவ சிகிச்சைகளை கவனித்துக் கொள்ளவும் ஷாப்பர்ஸ் ஸ்டாப் அமைப்பு சார்பில் ரூ.2.5 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. உங்கள் அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவுடன் பிரதீப் மெஹ்ராவுக்கு நன்கொடை வழங்கப்படும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Also Read : மகனுக்காக தந்தை செய்த தரமான செயல்..3 மாத உழைப்பு.. ரூ.8 லட்சத்தில் உருவான அற்புதம்!

முன்னதாக, தன்னைப் பற்றிய செய்தி வைரல் ஆனபோது, பிரதீப் மெஹ்ரா அதுகுறித்து கூறுகையில், “ எப்போதுமே நான் வீட்டுக்கு திரும்பி செல்கையில் ஓடுவது வழக்கம். நான் மெக் டொனால்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். இரவு வீட்டுக்கு வரும்போது தான் நான் ஓடுகிறேன். இல்லாவிட்டால் ஓடுவதற்கு எனக்கு நேரம் கிடைக்காது. இராணுவத்தில் சேருவதே எனது விருப்பம்’’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Published by:Selvi M
First published:

Tags: Trending

அடுத்த செய்தி