Home /News /trend /

நிறுத்தப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Internet Explorer-ன் சேவை.. ட்விட்டரில் ஏக்கத்தை வெளிப்படுத்திய 90's யூஸர்கள்

நிறுத்தப்பட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் Internet Explorer-ன் சேவை.. ட்விட்டரில் ஏக்கத்தை வெளிப்படுத்திய 90's யூஸர்கள்

Meme (Source : Twitter)

Meme (Source : Twitter)

Microsoft Internet Explorer | உலகளவில் மிகப்பெரிய மற்றும் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக திகழும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 27 வருட பிரவுசர் சேவையை ஜூன் 15ஆம் தேதி முதல் நிறுத்தி உள்ளது.

  யூஸர்களுக்கு 27 ஆண்டுகளாக இன்டர்நெட் சர்விஸை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு (Internet Explorer - IE) குட்பை சொல்லி இருக்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். கடந்த 1995-ல் வெளியிடப்பட்ட சர்ச் பிரவுசரான Internet Explorer, Windows 95-க்கான ஆட்-ஆன் (add-on) பேக்கேஜாக வந்தது. அதன் பின்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த Internet Explorer பிரவுசரை பேக்கேஜின் ஒரு பகுதியாக இலவசமாக வழங்க தொடங்கியது.

  கடந்த 2003-ல் சுமார் 95 சதவீத பயன்பாட்டுடன் உச்சத்தை எட்டியது Internet Explorer. ஆனால் IE-ஆல் அதன் நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு பல போட்டியாளர்கள் பிரவுசர் சர்விஸ் மார்க்கெட்டில் நுழைந்து சிறந்த யூஸர் இன்டர்ஃபேஸ், வேகமான இன்டர்நெட் ஸ்பீட் மற்றும் மென்மையான செயல்திறனை வழங்கத் தொடங்கியதே காரணம். போட்டியாளர்கள் அதிகரிக்க துவங்கியதால் படிப்படியாக Internet Explorer-ஐ பயன்படுத்தி வந்த யூஸர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதனை தொடர்ந்து கடந்த 2016 முதல் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் புதிய அல்லது பெரிய அப்கிரேட்ஸ் அல்லது புதிய வெர்ஷன்கள் என எதையும் வெளியிடவில்லை. கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட Internet Explorer 11 தான் மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட கடைசி மற்றும் இறுதி வெர்ஷன் ஆகும்.

  இந்நிலையில் கடந்த மாதம் சோஷியல் மீடியா மூலம் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஓய்வை நிறுவனம் அறிவித்தது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் என்பது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை விட வேகமான, பாதுகாப்பான மற்றும் நவீன பிரவுசிங் அனுபவமாக இருப்பது மட்டுமல்லாமல் பழைய, பாரம்பரிய இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளுக்கான இணக்கத்தன்மை குறித்த ஒரு முக்கிய கவலையை நிவர்த்தி செய்ய முடியும் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் எட்ஜ் இன்-பில்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் மோட்-உடன் வருகிறது, எனவே யூஸர்கள் மரபு IE-அடிப்படையிலான வெப்சைட்கள் மற்றும் அப்ளிகேஷன்களை அணுக முடியும்.  இதனிடையே இந்தியாவில் செயல்படும் பழமையான மற்றும் முதல் பிரவுசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சேவை நிறுத்தம் பற்றிய செய்தி பல யூஸர்களை ஏக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவர்கள் தங்கள் ஏக்கம் மற்றும் வருத்தத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

  Also Read : வசமாக சிக்கிய கூகுள்... 15,500 பெண் ஊழியர்களுக்கு 118 மில்லியன் டாலர் இழப்பீடு! 

  Product Hunt என்ற ட்விட்டர் யூசர் கூறுகையில் "27 வருட சேவைக்குப் பிறகு, மைக்ரோசாஃப்ட் ஜூன் 15 அன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு ஓய்வு அளிக்கப் போகிறது" என்று கேப்ஷனிட்டு 90'ஸ் யூஸர் கண்ணீர் விடுவது போன்ற ஒரு இமேஜை ஷேர் செய்து இருக்கிறார்.  Caesár என்ற யூஸர் கடந்த பல ஆண்டுகளாக நான் IE-ஐ பயன்படுத்தவில்லை, ஆனால் எனது குழந்தைப் பருவத்தில் நான் பெரும்பான்மையாகப் பயன்படுத்திய பிரவுசர் இதுவாகும். நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும் இது ஒரு சகாப்தத்தின் முடிவாகும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.  DeepCool என்ற யூஸர் கூகுள் க்ரோம், எட்ஜ், ஃபயர்பாக்ஸ் உள்ளிட்டவை Internet Explorer-ன் கல்லறையில் அஞ்சலை செலுத்துவது போன்ற மீம் இமேஜ் ஒன்றை ஷேர் செய்து "எப்போதும் சிறந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு குட்பை சொல்லுங்கள்" என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார்.  வெப் பேஜை ஓபன் செய்ய அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஃபைலை டவுன்லோட் செய்ய எவ்வளவு பொறுமை தேவை என்பதை உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். இருப்பினும் 90-களில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் நிச்சயமாக ஒரு பெரிய பங்கை கொண்டிருந்தது சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்யப்பட்டு வரும் ஏக்கம் கலந்த போஸ்ட்கள் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
  Published by:Selvi M
  First published:

  Tags: Internet, Microsoft, Trending

  அடுத்த செய்தி